பக்கம்:தம்பியர் இருவர்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 48 தம்பியர் இருவர்

ஆணவம் அற்றவிடத்து அவ்வாணவத்தின் வாலாகிய 'எனது எனப்படும் மமகாரமும் அற்றுவிடும். மமகாரம் அறுதலையே பற்று அறுதல்’ என்றுங் கூறுவர். இதனையே ஆழ்வாரும் அற்றது பற்று எனின் உற்றது வீடு (திருவாய் மொழி, 12:5) என்கிறார். மனிதனாய்ப் பிறந்தவன் கட்டுக்களிலிருந்து விடுதலை பெற வேண்டுவது மிகவும் இன்றியமையாதது என்பதை அனைவரும் ஒப்புவர். அவ் வாறு விடுதலை பெற ஆணவம் நீங்க வேண்டும். ஆணவம் நீங்க வேண்டுமாயின் வாழ்வில் ஒரு குறிக்கோளைக் கொண்டு வாழவேண்டும். பெரியோர் அனைவரும் இவ்வழி யைத்தான் மேற்கொண்டு ஒழுகினர். அவர்கள் பெரியோ ராய் இருந்தமையின் இவ்வழியை மேற்கொண்டனர் போலும் என்று நினைத்துவிட வேண்டா. இவ்வழியை மேற்கொண்டு ஒழுகினமையால்தான் பெரியோர் ஆயினர். இராவணன் போன்றார் தவம், கல்வி முதலிய வேறு துறை களில் பெருமை பெற்றுப் பெரியோராய் விளங்கினாலும், 'குறிக்கோள் இன்மையால் பெரியோர் தன்மையை இழந்து விட்டனர். ஆணவம் அவர்களை மெல்ல மெல்ல அழித்து விட்டது. i

இதற்கு மாறாக ஆணவத்திலிருந்து முற்றிலும் விடுதலை பெற்ற ஒரு மனிதனுடைய வரலாற்றையே பரதனுடைய வாழ்வில் காண்கிறோம். கவிஞன் ஒரு மனிதனைப் படைத்து அவனைப் பெரியவன் ஆக்குகிறான். மனிதனாய்ப் பிறந்த ஒருவன் எந்த அளவிற்கு உயர முடியும் என்பதைக் காட்டவே கவிஞன் பரதனைப் படைக்கிறான். வாழ்வில் உயரவேண்டுமாயின் சில வாய்ப்புக்கள் இருந் தால்தான் அது இயலும் என்று இன்று நம்மில் பலரும் நினைக்கிறோம். உயர் குடிப் பிறப்பு, அன்புடைய தாய் தந்தையர், தட்டாத செல்வம், நல்லறிவு முதலியன இருந் தாலன்றி வாழ்வில் உயர முடியாது என்று பலர் கருதவும் கூறவும் கேட்கிறோம். இவை இருப்பின் நலமே. ஆனால், இல்லாவிடினும் கவலை இல்லை. வாழ்க்கையில் குறிக்