பக்கம்:தம்பியர் இருவர்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 1 5 9.

என்ற முடிபுக்கு வந்தான் இராமபிரான். எனவே, என் தெய்வமும்’ என்று கைகேயியைக் குறிப்பிடுகிறான். இவன் தந்தை (தாய்) என் நோற்றான் (ள்) இவனைப் பெறுவ தற்கு!’ என்ற வியப்புத் தோன்றியவுடன் பெற்றவளைத் தெய்வம் எனவே கருதிக் கூறியும் விட்டான் பண்பாட்டின் உறைவிடமான இராமன். இராமனுடைய மதிப்பில் கைகேயி இவ்வளவு உயர்வடையக் காரணம் யாது? பரதனைப் பெற்றவள் என்ற காரணத்தைத் தவிர வேறு ஒன்றும் கூறுவதற்கில்லை. ஒருவன் பிறந்த குடியை உயர்த்தவேண்டும் என இத்தமிழர் கூறினர். அவர்கள் மனிதனின் தலையாய கடமையாகக் கருதிய இதற்கு நல்ல தோர் எடுத்துக்காட்டாய் அமைந்துவிட்டான் பரதன். ஒருவனுடைய தாய் தந்தையரை அறிய வேண்டின், அவனுடைய வாயிலிருந்து வெளிப்படும் சொல்லே போதுமானது என்கிறார் பொது மறை தந்த பெரியோர்.

'கிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் . குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.” (திரு. 959) நிலத்தின் இயல்பை அதில் தோன்றிய முளை காட்டுவதுபோல ஒருவன் குடிப் பெருமையை அவன் வாய்ச்சொல் காட்டுமாம். அறத்தின் ஆணி வேரான பரதனுடைய சொற்களை நேரே நின்று கேட்கும் பேற்றைக் காட்டிலேதான் இராமனும் பெறமுடிந்தது. பரதனுடைய பேச்சைக் கேட்கக் கேட்க இராமனுடைய மனம் பரதனை மட்டும் அல்லாமல் அவனைப் பெற்ற வளையும் எடை போட்டுவிட்டது. அதன் பயனாக அது வரை தாய் என்று நினைத்த கைகேயியை அதன் பிறகு தெய்வம் என்று கூறலானான் இராமனும். அம்மட்டோடு அல்லாமலும் பொது மறை கூறிய

'இற்பிறந்தார் கண் அல்லது இல்லை இயல்பாகச்

செப்பமும் நானும் ஒருங்கு.” (திரு. 951) என்ற குறளுக்கும் பரதன் இலக்கியமாதல் கர்ண்டற் குரியது. செப்பம் என்பது நேர்மை என்று பொருள்படும்.