பக்கம்:தம்பியர் இருவர்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தம்பியர் இருவர்

இவ்வாறு காவல் புரிவதற்குக் காரணமாய் அமைந்த இராமனை ஒரு முறை நோக்கினான். இவ்விருவரும் அண்ணன் தம்பியர். அரசை இழந்து அவதியுறுபவன் அண்ணன். ஆனால், அந்தக் கவலையோ வேறு கவலையோ ஒரு சிறிதுமின்றி அமைதியே வடிவாக உறங்கு கிறான் இராமன். இவ்வளவும் நடந்த பிறகு அரசையும் இழந்து, காட்டிற்கும் வரவேண்டிய நிலைமை ஏற்பட்டும், மன அமைதியை இழவாமல் இராமன் உறங்கும் அடிப்படை மனநிலை குகனுக்கு விளங்கவில்லை. இராமனுக்கு நேர்ந்த இன்னலைக் கண்டு இலக்குவன் விடியுமட்டும் அழுது திர்க்கிறான். அவ்விராமன் பட்ட இன்னலை நேரே காணா விடினும், காதால் கேட்ட பாவத்திற்கு இதோ குகனும் அழுகிறான். இவை இரண்டும் சரி. ஆனால், இவை இரண் டிற்கும் காரணம் இராமனுடைய இன்னல்கள்தாமே? அந்த இன்னல்களையும் பொருட்படுத்தாமல் இராமன் மனவமை தியுடன் உறங்கும் நிலையை எவ்வாறு பெற்றான்? இந்நிலை குகனுடைய கற்பனைக்கும் அடங்காமல் விரிவ தொன்று. எனவே, இருவரையும் மாறி மாறிப் பார்க் கிறான் குகன். இருவர் நிலைக்கும் கண்ணிர் விடுவது தவிர அவன் செய்யத்தக்கது வேறொன்று இருப்பதாகத் தெரிய வில்லை.

அவ்வாறாயின், அவன் காவல் பூண முடிவு செய்தது ஏன்? வைணவப் பெரியார்கள் கூறும் முறையில் ஓர் அழகு இருக்கிறது. ஆனால், கம்பநாடன் கற்பித்த குகனுக்கு அது பொருந்துமாறு இல்லை. எனவே, வேறு கருத்து இருக்கிறதா என்று ஆய்வதே நலம். அவ்வாறு ஆய்ந்தால், மற்றொரு விடையும் கிடைக்கிறது. இலக்குவன் விடியு மட்டும்.நிற்பது என்ற கொள்கையுடன் நிற்கிறான். அவன் இளமைக்கு ஏற்ற செயல் அன்று இச்செய்கை. அவ்வாறா யின், குகன் அவனை இச்செயல் செய்யாதிருக்க வேண்ட லாம். அவ்வாறு வேண்டினால் மட்டும் இலக்குவன் தன் கடமை என்று நினைந்து செய்கிற ஒன்றை விட்டுவிடு