பக்கம்:தம்பியர் இருவர்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

、3 2 தம்பியர் இருவர்

ஐயம் தோன்றத்தான் செய்கிறது. உண்மை வீரனாகிய குகனுக்குப் போர் என்று கூறியவுடன் மகிழ்ச்சி தோன்ற வேண்டுமே தவிரச் சினம் தோன்றக் காரணம் யாது? 'போரெனில் புகலும் புனைகழல் மறவர்’ என்பது புறப் பாடல். அத்தகைய பரம்பரையில் உள்ள குகனுக்குத் தோள்கள் கிளர்ந்து எழல் முறை. ஆனால், சினம் ஏன்? க | ர ண ம் எதிர்க்கரையிலிருக்கிறது. பரதனுடைய தொகை முரண் சேனையை அச்சேனை எழுப்பும் துகள் காரணமாகவே கண்டு கொண்டு பரதனே வருகிறான் என்பதையும் அறிந்து கொண்டான் குகன். ஆனால், அவன் மேல் சீற்றங் கொள்ளக் காரணம் யாது? காரணம் இருக் கிறது. குகனுடைய நிலைமையில் யார் இருப்பினும், பரதன்மேல் சினம் வரத்தான் செய்யும். அதில் தவறு ஒன்றும் இல்லை. இதன் காரணத்தைப் பின்னர்க் காண்போம்.

எல்லையற்ற சினத்துடன் எதிர்க்கரையைக் கண்ட குகன், தன் பரிவாரங்களை நோக்கிக் கூறத் தொடங்கி விட்டான். 'பெருஞ்சூழ்ச்சியுடன் எதிர்ப்புறத்தில் வந் துள்ள பரதனையும் அவனுடைய படைகளையும் மேல் உலகம் அனுப்ப முடிவு செய்து விட்டேன்! போருக்கு உடனே நீங்கள் புறப்படவேண்டும்! நீர்த்துறைதோறும் காவல் நிறுவுங்கள்! ஒரு படகைக்கூட ஒட்டாதீர்கள்!” வேடர் குலத் தலைவனாகிய குகன் தன் படைகட்கு இட்ட நாள் ஆணையாகும் இது.

உலகில் வாழும் புலிகள் அனைத்தும் ஒரு வழி வந்து கூடியது போல வீரர் அனைவரும் வந்து கூடிவிட்டனர். தலைவனாகிய குகன், அமைதிர் போர்க்கு’ என்று ஆண்ை இட்டுவிட்டான். வீரர் தத்தம் கடமையை அறிந்தவராதலின், தத்தம் தொழிலைச் செய்ய ஒரு பகுதி

Törder for the day