பக்கம்:தம்பியர் இருவர்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவாய் வேட்டுவன்

இந்தப் பரந்த உலகில் பல்வேறு வகைப்பட்ட மனிதர் இருக்கின்றனர். ஒரு சிலரைப் பார்த்ததும் அவருடன் நட்புக்கொள்ள விரும்புகிறோம்; சிலரைக் கண்டதும் வெறுக்கிறோம்; அவருடன் நட்பினராய் இருந்தாலும், எப்பொழுது அவரிட மிருந்து விடுதலை பெறலாம் என்றே முயல்கி றோம். கூடுமான வரை இந்நியதி தவறுவதில்லை. சில சமயங்களில் ஒருவரைப் பார்த்த அளவில் விருப்பு வெறுப்புக் கொள்வது தவறாகவும் முடி கிறது. ஒருவர் உடல் அமைப்பு, முகத்தோற்றம், கண்கள் முதலியவற்றிலிருந்து அவருடைய குண நலன்களை முடிவு செய்யலாமேனும், சில நேரங்களில் இம்முறை பெரிதும் பிழைபட்டுவிடு கிறது. மிகக் கடுமையான புறத்தோற்றம் உடை யவர், மிக இனிய பண்புடையவராய் இருத்தலும், மிகவும் விரும்பத்தக்க புறத் தோற்றம் உடை யவர், மிகக்கேடான பண்பாடுடையவராய் இருத் தலும் உண்டு. எந்தப் பொது நியதிக்கும் புறநடை கள் உண்டு என்பதை மறத்தலாகாது. இவ் வுண்மை நம்முள் பலரும் உலகானுபவத்தில் அறிகிற ஒன்றாகும். . இலக்கியத்திலும் இவ்விதப் படைப்புக்களைக் கவிஞன் படைக்கிறான். கொடுமனக் கூனியை எடுத்துக்கொள்

த.-1