பக்கம்:தம்பியின் திறமை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8


ஏராளமான பொருள் சம்பாதித்து அந்தத் தீவின் அரசிளங் குமரனைப் போல வாழ்ந்து வந்தேன். அந்தச் சமயத்தில் ஒரு நாள் ஒரு முனிவர் என்னிடம் வந்தார். அவருக்கு நான் அன் போடு பணிவிடை செய்து நிறையப் பொன்னும் மணியும் கொடுத்தேன். அவர் மகிழ்ச்சியடைந்து எனக்கு ஒரு அற்புத மான தாமரை மொக்கைக் கொடுத்துவிட்டுச் சென்ருர். அத் தாமரை மொக்கை நான் கையில் வைத்துக்கொண்டு அதன் அழகைப் பார்தது வியந்து கொண்டிருந்தேன். தாமரை மொக்கு மெதுவாக விரியத் தொடங்கியது. அதற்குள்ளிருந்து மிக அழகான ஒரு இளங்கன்னி வெளியே வந்தாள். அவள் என்னைக் காதலித்தாள். நானும் அவளைக் காதலித்தேன். இரு வரும் திருமணம் செய்து கொண்டு ஓராண்டு இன்பமாக வாழ்ந்து வந்தோம். பிறகு அவள் திடீரென்று ஒரு நாள் எப்படியோ மறைந்து போய்விட்டாள். என்னுல் அவளைப் பிரிந்து வாழ முடியவில்லை. அதனுல் எனது பொருள்களை யெல்லாம் தானம் செய்துவிட்டு நான் அங்கிருந்து புறப்பட் டேன். இரண்டு ஆண்டுகளாக எங்கெங்கோ சுற்றி அவளைத் தேடி அலைந்துவிட்டுக் கடைசியில் இங்கு வந்து சேர்ந்தேன். வந்து சில நாட்களாயின. இன்றுதான் இந்த நகரத்து அரசிளங்குமரியாகிய உன்னைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இங்கு வந்து பார்த்தால் என் மனைவியே இந்த நகரத்து அரசிளங்குமரியாக இருக்கிருள். இது எனக்கு அள வில்லாத மகிழ்ச்சியை உண்டுபண்ணுகிறது'.

இவ்வாறு நல்லமுத்து சுருக்கமாகக் கூறி முடித்தான். பொற்கொடி ஒன்றும் பேசாமல் மெளனமாக அமர்ந்திருந் தாள். அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவன் சொன்னதை உண்மை யென்று சொன்னலும் அவள் அவனுக்கு மனைவியாக வேண்டும். பொய்யென்று சொன்ன லும் நிபந்தனையின்படி அவனுக்கு மனைவியாக வேண்டும். அதனால் பொற்கொடி பேசாமல் இருந்தாள். நல்லமுத்து வெற்றியடைந்தான்.