பக்கம்:தம்பியின் திறமை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29


அரசன் திட்டமிட்டிருந்தான். ஆல்ை மாலியாங் ஏமாந்து விடவில்லை. அவனுக்கு ஒரு சூழ்ச்சி உதயமாயிற்று.

' அரசே, தாங்கள் என்னை மருமகளுக்கிக்கொள்ள விரும்பு வதைக் கண்டு. நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அதனல் தங்களுக்கு ஒரு புதுவிதமான வேடிக்கை காட்ட நான் இப் பொழுது ஆசைப்படுகிறேன்' என்ருன் அவன்.

"உனது ஆசைப்படியே செய். எனக்கு யாதொரு தடை யுமில்லை." என்று பதில் சொன்னன் அரசன்.

உடனே மாலியாங் ஒரு காகிதத்திலே மந்திரத்துரிகையால் ஒரு கடல் வரைந்தான். அவர்களுக்கு எதிராக நீலக்கடல் ஒன்று தோன்றியது. அலைகள் மெதுவாக எழுந்து அரச னுடைய கால்களை வருடிக்கொண்டு கரையில் மோதின. பிறகு மாலியாங் ஒரு அழகான கப்பல் வரைந்தான். கடலிலே அந்தக் கப்பல் ஒரு மாய மாளிகையைப் போல மிதந்தது. நவரத்தினங் கள் எல்லாம் அதில் இருந்து ஒளிவிட்டன. இந்தக் காட்சியைக் கண்டு அரசன் பிரமித்துப்போன்ை.

' அரசே, இந்தக் கப்பலில் ஏறிச் சிறிது நேரம் உல்லாச மாகக் கடலின்மேலே சென்று வாருங்கள். நான் ஒரு தென் றலை வரவழைக்கிறேன்” என்று மாலியாங் நயமாகக் கூறினன். அரசன் உடனே கப்பலில் ஏறிக் கொண்டான். மாலியாங் முதலில் தென்றல் காற்றைக் காகிதத்தில் வரைந்தான். உடனே தென்றல் எழுந்தது. அது கப்பலை மெதுவாகக் கரையிலி ருந்து கடலுக்குள்ளே செலுத்தியது. அரசன் மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்தான். " பலே பலே, மாலியாங்" என்று கரை யில் நின்ற மாலியாங்கை நோக்கி உற்சாகத்தோடு கூறின்ை. ஆளுல் அடுத்த கணத்திலே அவனுடைய மகிழ்ச்சியானது பயமாக மாறியது. ஏனென்ருல் மாலியாங் தனது மந்திரத் தூரிகையைக் கொண்டு ஒரு கொடுமையானபுயலை வரைந்தான். அது நூற்றுக்கணக்கான மைல் வேகத்துடன் கிளம்பிற்று. கப்பலை ஒரேயடியாக அடித்துக் கொண்டு போய் நடுக் கடலில் கவிழ்த்தது. அரசன் கப்பலோடு கடலில் மூழ்கி மாண்டான்.