பக்கம்:தம்பியின் திறமை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


முச்சீக்கு நல்ல தருணம் கிடைத்தது. அவன் எப்படியோ கஷ்டப்பட்டுத் தன் கைக்கட்டுகளை அவிழ்த்துக்கொண்டான். பிறகு கால் கட்டுகளை அவிழ்க்க முடியாதா என்ன? அது சுல பமாக முடிந்தது. அவன் மெதுவாக உணவுப்பெட்டியைக் கொண்டுவந்து தான் படுத்திருந்த இடத்தில் வைத்து அதன் மேலே தனது மேலங்கியைப்போட்டு மூடிவிட்டான். காளிகங் கனுடைய ஆள் ஒருவனுடைய குல்லாயைத் தன் தலையில் வைத்துக்கொண்டான். பிறகு அமைதியாக உட்கார்ந்து உணவை நன்ருகச் சாப்பிடத் தொடங்கின்ை.

காளிகங்கன் அரைத்துக்கத்தோடு விழித்துப் பார்த்தான். முச்சி பாறையோரத்திலே அசைவில்லாமல் நன்ருகத் தூங்கு வதுபோல அவனுக்குத் தோன்றியது. உடனே அவன் அந்த இடத்திற்குச் சென்று உணவுப்பெட்டியைக் காலால் உதைத் துத் தள்ளிஞன். அது வெகுதூரம் கீழே சென்று தொப்பென்று விழுந்தது. 'சனியன் தொலைந்தான்' என்று கூறிக்கொண்டே மகிழ்ச்சியோடு திரும்பிவந்து காளிகங்கன் மறுபடியும் படுத்துக் கொண்டான். உணவு சாப்பிடுகிற முச்சீயைத் தன்னுடைய ஆட்களில் ஒருவன் என்று நினைத்துக்கொண்டு அவன், "நன்ருகச் சாப்பிடு, நன்ருகச் சாப்பிடு. நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்விட்டுப் பிறகு வருகிறேன்' என்று கூறிவிட்டுத் தூங்கிவிட்டான். அவன் மறுபடியும் எழுந்திருப்பதற்குள் முச்சி அந்த இடத்தைவிட்டு நழுவிவிட்டான்.

மறுநாள் காளிகங்கனைத் தேடிக்கொண்டு முச்சி அவன் மாளிகைக்குப் போளுன்.

"நன்ருகச் சாப்பிடும்படி சொன்னதற்கு நான் நன்றிகூற வந்தேன்' என்று அவன் தைரியமாகச் சொன்னன். காளிகங் கனுக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது. இருந்தாலும் அவன் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. முச்சீயை அன்போடு தன் மாளிகைக்குள்ளே அழைத்தான். இந்தா, இந்தத் தங்கத்தாயத்தை வைத்துக்கொள்” என்று நாய் வடி வத்தில் இருந்த ஒரு தாயத்தை அவனிடம் கொடுத்தான்.

நாய் வடிவத்தில் உள்ள தாயத்தைக் கழுத்தில் அணிந்து கொண்டால் பல நன்மைகள் உண்டாகும் என்பது திபெத்து