பக்கம்:தம்பியின் திறமை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37


நாட்டிலே ஒரு நம்பிக்கை. பேய், பிசாசு எதுவும் பக்கத்தில் வராது என்றும் சொல்வார்கள். அதனுல் முச்சீ அந்தத் தாயத்தை ஆவலோடு வாங்கிக்கொண்டான். உடனே காளிகங்கன் உரத்துக் கூவத் தொடங்கினன். 'டேய் திருடா ! என் தாயத் தைத் திருடிக்கொண்டாயா ? இவனைப் பிடியுங்கள், கட்டுங்கள்" என்று கத்தினன். வேலைக்காரர்கள் ஓடிவந்து முச்சீயைப் பிடித்துக் கட்டினர்கள்.

"பகலிலேயே திருடுகிருயா? உனக்கு நல்ல பாடம் கற்பிக்கி றேன் பார்' என்று சொல்லி காளிகங்கன் முச்சீயை யாலுங் ஆற்றின்மேலிருந்த ஒரு பாலத்திற்கடியில் கட்டிவைத்தான். பாலத்தை முதுகிலே சுமப்பவனைப்போல முச்சீ பாலத்தின் அடிப்பாகத்தில் கட்டுண்டு கிடந்தான். அவனுக்கு உதவி செய்ய அங்கு யாருமே வரவில்லை. முச்சீக்குக்கீழே ஆற்றுத் தண்ணீர் கொந்தளித்துக்கொண்டு ஓடிற்று. முச்சீ ஒரு பாட்டைப் பாடிக் கொண்டே அழுது புலம்பினன். அவனுடைய தாயாரின் நினைவும் அவனுக்கு வந்தது. துக்கம் தொண்டையை அடைத் தது. அவளுல் பாடக்கூட முடியவில்லை.

அந்தச் சமயத்திலே கலாவங்கன் அங்கே குதிரைமேல் வந்தான். அவன் காளிகங்கனுடைய தம்பி. பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்குச் சென்றுவிட்டு அப்பொழுதுதான் அவன் திரும்பி வந்துகொண்டிருக்கிருன். பாலத்தின் அடிப் பாகத்தில் ஒருவன் கட்டுண்டு கிடப்பதைக் கண்டு அவனுக்கு ஆச்சரியம் உண்டாயிற்று.

"யாரங்கே? அங்கே என்ன செய்கிருய்' என்று அவன் கேட்டான்.

'நான் முதுகு பலமடையச் செய்துகொண்டிருக்கிறேன்' என்ருன் முச்சீ.

நெடுந்துாரம் குதிரைமேல் சவாரி செய்ததால் கலாவங்க னுக்கு முதுகு வலித்தது. தானும் முதுகுக்கு பலம் கொடுக்க விரும்பினன். "என்னையும் பாலத்துக்கு அடியில் கட்டிவைத்து அந்த வித்தையைக் கற்றுக்கொடுப்பாயா?" என்று அவன் கேட்டான்.