பக்கம்:தம்பியின் திறமை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52


திலே வந்திருந்த குட்டிப்பேய் ஒன்றின் வலதுகை அவன் பிடியில் அகப்பட்டது. இருட்டில் அந்தக் கை யாருடையது என்று தசுக்கனுக்குத் தெரியவில்லை. எத்தன் கைதான் என்று நினைத்து அவன் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். 'ஒடப் பார்க்கிருயா? அது முடியாது; கையை விடவே மாட்டேன்' என்று அவன் உரத்துக் கூவிஞன். அந்தச் சமயத்தில் இரண்டு பேய்கள் அங்கேயிருப்பது எத்தனுக்குத் தெரிந்துவிட்டது. அவன் நடுங்கிக்கொண்டே ஒரு மரத்தின் பின்னல் போய் மறைந்துகொண்டு என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்க்கத் தொடங்கின்ை. தசுக்கன் குட்டிப் பேயின் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்தான். கையிலகப் பட்டகுட்டிப்பேய் பயந்து நடுங்கிக்கொண்டிருந்தது. அதற்குச் சத்தம் போடவும் தைரியம் வரவில்லை.

மற்ருெரு குட்டிப்பேய் பயந்து ஒட்டம் பிடித்தது. சுடு காட்டிலிருந்த ஆயிரம் பேய்களிடத்திலும் அழுதுகொண்டே நடந்த விஷயத்தை அது சொல்லிற்று. எல்லாப் பேய்களும் பயந்து அழத் தொடங்கிவிட்டன. அப்பொழுது ஒரு கிழப்பேய் முன்னுல் வந்து, 'இப்பொழுது அழுது கொண்டிருப்பதால் பயனில்லை. அந்த ஆள் இரண்டணுத்தானே வேண்டும் என்று கேட்கிருன் ? நாம் ஒவ்வொருவரும் ஒரு இரண்டளு கொடுத் துக் குட்டிப்பேயை மீட்டு வருவோம்” என்றது. ஐயோ, அவன் எல்லோரையும் சேர்த்தும் பிடித்துக்கொள்வான்; நாங்கள் வரமாட்டோம்' என்று மற்ற பேய்களெல்லாம் ஒரே மூச்சில் கூறின.

" அவனுக்குப் பணந்தான் வேண்டும். பணத்தைக் கொடுத்து விட்டால் அவன் நம்மை ஒன்றும் செய்யமாட்டான். ஒவ்வொருவரும் இரண்டணு எடுத்துக் கொள்ளுங்கள்" என்று தைரியம் சொல்லிற்று கிழப்பேய்.

கடைசியாக எல்லாப் பேய்களும் அரை மனதோடு ஒப்புக் கொண்டன. கிழப்பேய்தான் பணத்தை மூட்டையாகக் கட்டிக் கொண்டு முன்னல் செல்லவேண்டும்" என்று மற்ற பேய்க ளெல்லாம் சொல்லவே கிழப்பேயும் அதற்குச் சம்மதித்த து. கிழப்பேய் முன்ஞல் செல்ல மற்ற பேய்களெல்லாம் நடுங்கிக்