பக்கம்:தம்பியின் திறமை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


“இரவிலே நிலாவும் சூரியனைப்போல நன்ருகப் பிரகாசிக்கக் கூடாதா? அப்படிப் பிரகாசித்தால் நமக்கு நல்ல வெளிச்சமும் கிடைக்கும். குளிரின் தொல்லையும் இருக்காது” என்று மகள் கூறிஞள்.

'நிலா எல்லா இரவுகளிலும் ஒரேமாதிரியாக முழுவெளிச் சத்தோடு பிரகாசிக்கக் கூடாதா? அதுவும் இல்லையே! நிலாவிடம் சொல்லி நன்ருகப் பிரகாசிக்கும்படி செய்யவேண்டுமென்று எனக்கு ஆசையாக இருக்கிறது' என்ருன் மகன்.

‘வெகுதூரத்திலே மேகத்தை முட்டி அதற்கு மேலேயும் உயர்ந்து நிற்கும்படியான ஒரு மலை இருக்கிறதாம். அந்த மலையின் உச்சியிலே வெண்பனிச் சிகரத்திலே ஒரு மகான் இருக்கிருராம். அவர் நிலா வரும் போதெல்லாம் அதற்குள்ளே புகுந்து விளையாடிவிட்டுத் திரும்புவாராம். அவரைக் கண்டு கேட்டுக்கொண்டால் ஒரு வேளை அவர் நிலாவை நன்ருகப் பிரகாசிக்கும்படி செய்யலாம்' என்று கிழவன் சொன்னன்.

உடனே மகன், 'அப்பா, அப்படியாளுல் நான் இன்றே புறப்பட்டு அவரைச் சந்திக்கப்போகிறேன்' என்று உற்சாகத் தோடு சொல்லிக் கொண்டு எழுந்தான். 'மகனே, அந்த வெள்ளிப் பனிமலை வெகுதூரத்தில் இருக்கிறது. அதன் அடி வாரத்திற்குப்போய்ச் சேருவதே மிகவும் கஷ்டம். அதன் உச்சிக்குப் போய்ச் சேருவது என்ருல் வழியிலே எத்தனையோ