பக்கம்:தம்பியின் திறமை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

行霉

இருந்தன. அவற்றின் மீதெல்லாம் ஏறி இறங்கி வடக்குத் தி ைச ைய நோக்கிப் போய்க் கொண்டேயிருந்தான். கடைசியில் வெள்ளிப்பனிமலை தோன்றிற்று. அதன்மேலே ஏறினுன், அவன் கால்கள் தேய்ந்துபோயின. பாதங்களில் ரத்தம் பீறிட்டு ஒழுகிற்று. பிறகு அவளுல் கால்களை உபயோ கித்து நடக்கவே முடியவில்லை. அவன் கைகளையும் முழங்கால் களையும் தரையில் ஊன்றித் தவழ்ந்து தவழ்ந்து செல்லலாளுன். கைகளிலும், முழங்கால்களிலும் தோல் உரிந்து ரத்தம் பெருக் கெடுத்தது. அவன் தன் அரையில் கட்டியிருந்த தோலைக் கிழித்துக் கைகளிலும், முழங்கால்களிலும் கட்டிக்கொண்டு மேலும் தவழ்ந்து செல்லத் தொடங்கினன். மேலே ஏறஏற மரஞ்செடிகளே தென்படவில்லை. ஒரே வெளுப்பாகப் பணியே மலையாக நின்றது. அதன் மேலும் அவன் அச்சமில்லாமல் தவழ்ந்து சென்ருன். கடுங்குளிர் உடம்பை நடுக்கிற்று. அவன் மனம் தளரவே இல்லை.

இப்படி அவன் விடாமுயற்சியோடு சென்றதன் பயனுகக் கடைசியில் மலைஉச்சியிலிருக்கும் மகானைத் தரிசிக்க முடிந்தது. அவருடைய கண்கள் ஏதோ ஒருவித ஒளியோடு ஜொலித்தன. சிறுவன் அவரை அணுகி வணங்கினன்.

'ஐயா, உலகத்திலே மக்களெல்லாம் இரவு நேரங்களிலே வெளிச்சமில்லாமல் துன்பப்படுகிருர்கள். சூரியனைப்போலவே நிலாவும் இரவில் நன்ருகப் பிரகாசித்தால் அத் துன்பமெல்லாம் நீங்கிவிடும். நிலா அப்படிப்பிரகாசிக்கும்படி நீங்கள்தான் செய்ய வேண்டும். உங்களைக் கேட்டுக்கொள்வதற்காகவே நான் மிகுந்த சிரமப்பட்டு இங்கு வந்திருக்கிறேன்' என்ருன் பையன்.

பையனுடைய உடம்பெல்லாம் காயம் இருப்பதையும் அவன் மிகவும் இளைத்து மெலிந்திருப்பதையும் அந்த மகான் கூர்ந்து கவனித்தார். பையனுடைய ஆர்வம் அவருக்கு நன் ருகத் தெரிந்தது. "பையா! உன்னுடைய முயற்சி மிகவும் நல்லதுதான். நான் உனக்காக நிலாவைக் கேட்டுப் பார்க்கி றேன்' என்று சொல்லிவிட்டு நிலா மேலே வருகின்ற சமயம் பார்த்து அதற்குள்ளே புகுந்து மறைந்தார்.