பக்கம்:தம்பியின் திறமை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63.

அடுத்த விடிையில் அவள் பருத்திச்செடியாக மாறிப் பூத்துக் காய்த்து விளங்கினுள்.

மகள் புறப்பட்டுச் சென்று பத்து மாதம் ஆகியதைக் கிழவன் அறிந்து அவனும் வெள்ளிப் பனிமலையை நோக்கி நடந்தான். அவனும் பல துன்பங்களை அனுபவித்தாலும் மனம் தளராமல் மலையின் உச்சியை அடைந்தான். மகானைக் கண்டு வணங்கினன். தன் மகனும் மகளும் அங்கு வந்து மகானே வேண்டியதையும், பிறகு அவர்கள் ஆமணக்குச்செடியாகவும், பருத்திச்செடியாகவும் மகிழ்ச்சியோடு மாறியதையும் மகா னிடமிருந்து தெரிந்துகொண்டான்.

'ஐயா, நானும் உலகத்துக்காக ஏதாவது நல்லது செய்ய ஆசைப்படுகிறேன். எனக்கும் ஒரு முத்துக் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டான். அவனைப் பார்த்து, "என்னிடம் இனி முத்து ஒன்றும் இல்லை. அது அவசியமும் இல்லை. நீ வேறு வகையில் உலகத்துக்கு நல்ல காரியம் செய்யலாம். இந்த ஆமணக்கு விதைகளையும், பருத்தி விதைகளையும் எடுத்துச் சென்று உலகத்திலேயே பல இடங்களில் முளைக்க வை. அவற் றின் உதவியால் மக்களுக்கு விளக்கும், நல்ல ஆடையும் கிடைக்கும்' என்று மகான் மொழிந்தார்.

அவர் கூறியவாறே விதைகளையெடுத்துக் கொண்டு அவரை வணங்கி விட்டுத் திரும்பினுன் கிழவன். பல இடங்களிலே விதைகளைப் போட்டுச் செடிகளை வளர்க்க ஏற்பாடுசெய்தான். அன்று முதல் மக்களுக்கு இரவிலே எண்ணெய் விளக்கின் உதவியால் நல்ல வெளிச்சமும் உடம்பைக் குளிரிலிருந்து காப்பாற்றிக்கொள்ளப் பருத்தியின் உதவியால் வெது வெதுப் பான ஆடைகளும் கிடைத்தன.