பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரவையாரின் ஊடல் தீர்த்தல் #15 பேரரு ளாளர் எய்தப் பெற்றமா ளிகைதான் தென்பால் சீர் வளர் கயிலை வெள்ளித் திருமலை போன்ற தன்றே.* என்று காட்டுவார். பரவையார் இக்காட்சியை நேரில் காணும் பேறு பெறுகின்றார்; நாம் மானசீகமாகக் கண்டு களிக்கின் றோம். கணவருக்குப் பலமுறை நேர்காட்சியில் தோழனாக நின்று உதவியவர் இப்பொழுது அவர் மனைவிக்கும் நேர் காட்சி தந்ததை நினைந்து போற்றி மகிழ்கின்றோம். தெய்வக்காட்சியைக் கண்ட பரவையார், விரைந்து எதிர் சென்று சிவபெருமான் திருவடிகளில் வீழ்ந்து வணங்கு கின்றார். சிவபெருமான், பரவையாரை நோக்கி, நங்காங்: உரிமையால் ஊரன் ஏவு மீனவும் உண்டால் வந்தோம்: தீ முன்புபோல் மகத்துரையாது நின்பிரிவால் வருத்தமுறும் சுந்தரன் நின்னை அடைதற்கு நீ இசைதல் வேண்டும்' எனப் பணித்தருளுகின்றார். இந்த அருள் மொழியைக் கேட்ட பரவையார், 'இவ்வாறு முழுமுதற் கடவுளாகிய ஆரூர்ப் பெருமானை அலைக்கழித்தேனே' என மனங் கலங்கிக் கண்ணிர் மல்கி, ‘அடியேன் செய்த தவப்பயன.ால் அருமறை முனிவராக முன்பு வந்தவரும் நீர்தாமோ? இங்ஙனம் நள்ளிருளில் ஒளிவளர் செய்ய பாதம் தரையிற்பட்டு வருந்த அன்பர்க்காக இங்குமங்கும் உழல்வீராகி எளிவந்தருளினி ராயின், சிறியேன் இதற்கு உடன்படாமல் என் செய்வேன்?" என்று தம் இசைவு தோன்றக் கூறி இறைஞ்சுகின்றார். 17. டிெ. டிெ, 361, 352, 18. மீனவும் என்ற சொல் முதல் முறை அருச்சகர் கோலத்துடன் வந்தவர் தானே என்பதனை உறுதிப் படுத்துகின்றது.