பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏயர்தோன் கலிக்காமருடன் நட்பு - #23 செய்தியை ஒருவரும் அறியாதபடி மறைத்து விட்டு நாவலூரரை எதிர் கொண்டழைக்கும்படி உறவினர்கனை அனுப்புகின்றார். - எதிர் கொண்டழைக்க வந்தவர்களுடன் தம்பிரான் தோழர் ஏயர்கோன் திருமாளிகையை அடைகின்றார். கவிக்காமரின் தேவியாரும் தம்மை நன்கு அலங்களித்துக் கொண்டு தீபம், பூர்ண கும்பம், நல்ல மலர் மாலை இவற்றைக் கொண்டு தொழுது எழச் செல்லுகின்றார்: உறவினர்களும் உடன் செல்லுகின்றனர். நம்பியாரூரரும் நகை முகம் அவர்க்கு நல்கி, மொய்ம்மலர்த் தனிசின்மீது முகம் மலர்ந்து இனிது வீற்றிருக்க, பான்மை அர்ச்சனைகன் எல்லாம் பண்பினில் வழுவாமல் செய்யப்பெறுகின்றன. நாவலூரர் அவற்றை விரைவினில் ஏற்றுக் கொண்டு யான் மிகவும் வருந்துகின்றேன்: கவிக்காமரின் சூலை நோயினை விரைவினில் போக்கி அவருடன் அளவளாவிஇருத்தற்கு என் மனம் விரைகின்றது' எனக் கூறுகின்றார். - கலக்கழரின் தேவியாரின் ஏவலால் பணியாட்கள் நம்பி பாரூரை வணங்கிச் நின்று, "பெரியீர், கலிசாமருக்குத் தீங்கு ஒன்றுமில்இை. உள்ளே அமைதியாகப் பள்ளி கொண்டுள் ளார்: என்று விண்ணப்பம் செய்கின்றனர். தம்பிரான் தோழர், "நீவிர் கவிக்காமருக்குத் தீங்கொன்றுமில்லை என்கின்றீர். ஆயினும், என் மனம் தெளிவு பெறவில்லை. ஆதலால் யான் அவரை விரைவிற் காணல் வேண்டும்’ என் கின்றார். அவர்தம் விருப்பத்தை மறுத்தற்கியலாது அவரைக் கலிக்காமர் இருந்த அறைக்கு அழைத்துச் செல் கின்றனர் பணியாட்கள். அந்தோ! அந்த அறையினுள் நுழைந்த தம்பிரான் தோழர் குருதி சோரக் குடர்சரிந்து உயிரற்றுக் கிடந்த கவிக் காமரது உடலைக் கண்டு மன நடுக்க முறுகின்றார். 'நானும் இவர் முன்பு என் ஆவியைத் துறப்பேன்" என்று துணிந்து