பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருத்தல வழிபாடு #27 சேரமான் அடியேன் என்னோ பிழை செய்தது?’ எனப் பொருமுகின்றார். 'உடம்பின்மீது கொண்ட ஆசையால் அடையும் இன்பம்தான் யாது?’ என்று மனம் வெறுத்து உடைவாளை உருவித் தம் திருமார்பில் நாட்ட முயல் ஒன்றார். ஈசனும் விரைந்து சிலம்பின் ஒலியைக் கேட்பிக் கின்றார். உடனே உடைவாளை அகற்றித் திருக்கைகளைத் தலைமேல் கூப்பியவராய் "திருவருள் முன்செய்யா தொழிந்தது ஏன்?' என்று வினவ "நம்முடைய கூத்தாடலல வணங்கிய வன்றொண்டன், ஒன்றுண் உணர்வால் நம்மைத் போற்றிப் பதிகம் பாடுதலால் அதனைக் கேட்டு மகிழ்ந்து இங்கு வரத் தாழ்த்தோம்' என்கின்றார் அம்பலவாணர். இது வன்றொண்டர் என்ற அடியார் ஒருவரின் இருப்பை நினைப்பிப்பதாக இருந்தது." சேர மான் பெருமாளுக்கு வன்றொண்டரைக் காண வேண்டும் என்று ஆர்வம் மீதுர்ந்து நிற்கின்றது. திருவஞ்சைக் களத்து இறைவனை வலன்கொண்டு இறைஞ்சி அமைச்சர் களுடன் திருவாரூரை நோக்கி வருபவர், வழியில் தில்லைச் சிற்றம்பலவன்மீது பொன் வண்ணத் திருவந்தாதி பாடி வழி பட்டுத் திருவாரூர்ப் பயணத்தைத் தொடங்குகின்றார். சேரவேந்தரது வருகையை உணர்ந்த தம்பிரான் தோழர் சிவனடியார் கூட்டத்துடன் அவரை எதிர் கொண்டழைக் இன்றார். நம்பியாரூரரைக் காணப்பெற்ற கழறிற்றறிவார்" அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அவரை இருகை களாலும் எடுத்துத் தழுவிக் கொள்ளுகின்றார், இதனைச் சேக்கிழார் பெருமான், 1. பெ.பு: கழறிற்றறிவார்-42 2. பெ. பு: கழறிற்றறிவார்.44, - 3. யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வுடைய வர் (கழறிற்றறிவார்.14)