பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருத்தலங்கள் 231 திருநறையூர்-சித்தீச்சரம், நன்னிலத்துப் பெருங்கோயில், திருப்புகலூர் வர்த்தமாணிச்சரம், திருநாகைக் காரோணம், திருவாரூர்.அரனெறி, தண்டலை-நீள்நெறி, பெண்ணாகடம். துரங்கானை மாடம், திருவெண்ணெய் நல்லுtர்-திரு வருட்டுறை, திருச்கச்சி-திருவேகம்பம், திருக்கச்சூர்-ஆலக் கோயில், அன்பில் - ஆலந்துறை, திருப்புள்ள மங்கை - ஆலந் துறை முதலியன காண்க. இறைவனுடைய வீரச்செயல்கள் காரணமாக : இறை வனுடைய வீரச் செயல்கள் வெளிப்படுவதற்கு நிலைக்கள மாக அமைந்த திருக்கோயில்கள் வீசஸ்தானம் என்று வழங்கப்பெறுகின்றன. தமிழில் வீசட்டானம் எனத்திரிந்தது என்பர், ஆளுடைய பிள்ளையார் 'அட்டானம் என்றோதிய நாலிரண்டும் (2.39:3) என்ற தொடரால் இறைவனுடைய வீரச்செயல்கள் வெளிப்பட்ட திருத்தலங்கள் எட்டு என்று குறிப்பிடுவர். இவற்றுள் திரிபுரத்தை எரித்தழித்த தலம் திருவதிகை (1): மார்க்கண்டனுக்காகக் கூற்றுவனை உதைத்த தலம் திருக்கடலூர் (2): பிரமனது தருக்கினை அடக்குவதற்காக அவன் கொண்டிருந்த ஐந்து தலைகளில் ஒன்றைக்கிள்ளி எறிந்த தலம் திருக்கண்டியூர் (3): மன்மதனை எரித்ததலம் திருச்குறுக்கை (4); அந்தகாசுரனைக் கொன்ற தலம்:திருக்கோவலூர் (5):தக்கனது தலையைத் தடிந்ததலம் திருப்பறியலூர் (6): சலந்தராசுரனைத் தம் கால் பெரு விரலால் கீறியமைத்தலம் திருவிற்குடி), கயமுகாசுரனாகிய யானையினைக் கொன்று அதன்தோலை உரித்துப்போர்த்துக் கொண்ட தலம் வழுவூர்(8)" இவை எட்டும் அட்ட விரட்டங்கள் எனப் போற்றப்பெறுகின்றன. இவற்றுள் “விற்குடி நீங்கலாக ஏனைய ஏழு வீரட்டானங்களுடன் 10. வழுவூர் (வைப்புத் தலம்). மாயூரத்தருகே உள்ளது. வழுவூர் வீரட்டம்’ என்பது அப்பர் திருவாக்கு (9.70:8). ... . . .