பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நம்பியாருரரின் - பிறப்பும் வளர்ப்பும் செந்தமிழ் நாட்டில் புண்ணியத்தின் விளைநிலமாகத் திகழ்வது திருமுனைப்பாடிநாடு. திருக்கோவலூர் வழியாகச் சென்று திருப்பாதிரிப் புலியூருக்கு வடக்கில் கடலொடு கலக்கும் தென் பெண்ணையாறு. திருக்கோவலூருக்குக் கிழக்கிலிருந்து கடலொடு கலக்குங்காறும் பரந்தவெளியில் வாய்கின்றது. அதன் நீரைப் பெற்று வளங்கொழிக்கும் நலம் இறந்த நாடுதான் பண்டைநாளில் 'திருமுனைப்பாடி நாடு' என்று வழங்கிற்று. இது தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் இடையிலுள்ளமைபற்றி 'நடுநாடு எனவும், 2.3 ால்லப்பெறும். இந்த நாட்டின் தலைநகர் திருநாவலூர்’ என்பது. இந்நகரில் அம்மையப்பருக்கு வழிவழி அடிமைசெய்து - அவர் ஆதிசைவ மறையவர் மரபில் தோன்றிப் புகழால் மேம்பட்டவர் சடையனார் என்பார். இவருடைய அருமைத் ணைவியார் இசைஞானியார் ஆவார். இவர்கள் இருவரும் جن இசய்து தவுப்பயனால் ஒரு நன்னாளில் ஒர் ஆண் மகவு பிறக்கின்றது. பெற்றோர்கள் சிவனருளால் தோன்றிய தம் குழந்தைக்கு நம்பியாருசர் என்று திருநாமம் இட்டு வழங்கு றனர். தம்பியாரூரர் என்பது, திருவாரூரில் திருக்கோயில் கொண்டுள்ள சிவபெருமானின் திருப்பெயராகும். . சுந்தரர் தேவாரத்தில் திருநாவலூரன் (7.5:0) மறை தங்குரிசில் 125:10, சடையன்றன் காதலன் (7.58:10) 1. தென்னார்க்காடு மாவட்டப் பகுதியாகும்.