பக்கம்:தம்ம பதம்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

கூறியுள்ளதைப் பார்க்கினும் அதிகமாக எதுவும் கூறமுடியாது. அவருடைய புகழ்மாலை வருமாறு:

பௌத்த சமயத்தைப் பற்றித் தெளிவாய்த் தெரிந்து கொள்வதற்கு, பௌத்த தரும ஆராய்ச்சிகளை ஆரம்பிக்கும் போதே, ஆராய்ச்சியாளனுக்கு (ஒரு பெரியவருடைய) விருத்தியுள்ள கைகளால் தம்ம பதத்தை அளிப்பதை விட மேலான காரியம் எதுவும் இருக்கமுடியாது. தம்மபதம் தன்னிகரற்ற அழகுடையது; பொருள் நிறைந்த பழமொழிக் களஞ்சியம்; பௌத்த சமயத்தைத் தெரிந்து கொள்ள உறுதி கொண்ட எவரும் திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டிய நூல் இது.[1]

தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகட்கு மேலாலாகப் பௌத்தசமயம் நிலைத்து வளர்ந்து செழித்திருந்தது. தமிழர் புத்தரைத் ‘தயா வீரன், தரும ராஜன், அருளறம் பூண்டோன், அறத்தகை முதல்வன், புத்த ஞாயிறு, போதி மாதவன், மன்னுயிர் முதல்வன், பிறவிப்பிணி மருத்துவன்’ என்று பல படப் புகழ்ந்து போற்றி வந்திருக்கின்றனர். தமிழ் நாடெங்கும் பௌத்தப்


  1. 1. ‘For the elucidation of Buddhism nothing better could happen that, at the very outset of Buddhist studies, there should be presented to the student by an auspicious hand the Dhamma Pada, the most beautiful and richest collection of proverbs, to which anyone who is determind to know Buddhism must over and over again return.’
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/12&oldid=1357326" இலிருந்து மீள்விக்கப்பட்டது