பக்கம்:தம்ம பதம்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தண்டனை ☐ 39

132. உடைந்து போன மணி ஒசையற்றிருப்பதுபோல் , உன்னை நீ அடக்கிக் கொண்டு அமைதியாயிருந்தால், நீ நிருவாணத்தை அடைந்தவனாவாய். ஏனெனில், நீ கலக்கம் நீங்கிச் செயலற்ற நிலையிலிருக்கிறாய். (6)

133. ஆயன் தன் கழியால் பசுக்களைப் புல்வெளிக்கு ஒட்டிச் செல்வது போல், மூப்பும் சாக்காடும் மக்களின் ஆயுளை ஒட்டுகின்றன. (7)

134. மூடன் பாவமான கருமங்களை அறியாமல் செய்கிறான். ஆனால் தீய மனிதன் தீயால் எரிக்கப்படுவது போல், தன் கருமங்களாலேயே வேகிறான். (8)

135. தண்டிக்கத் தகாதவர்களையும், குற்றமற்ற நல்லவர்களையும் தண்டித்துத் துயரப்படுத்துவோன் (பின் கண்ட) இந்தப் பத்து நிலைகளில் ஒன்றை அடைவான்: (9)

136. வேதனை, நஷ்டம், உடலில் சேதம், பெருநோய்கள், சித்தப் பிரமை, (10)

117. அரச தண்டனை, பயங்கரமான குற்றச்சாட்டு, பந்துக்களை இழத்தல், பொருள் அழிவு, (11)

118. அல்லது, அவன் வீடுகளில் இடிவிழுந்து எரித்தல், மேலும், உடல் அழிந்த பின்னர் அந்த மூடன் நிரயம் புகுவான். (12)

119. மெய்ப்பொருளை உணராமல் ஐயத்தில் உழல்வோனை எதுவும் புனிதமாக்கி விடாது; ஆடையின்றி அலைதல், சடைத்தலை, புழுதியால் (உடல்) மாசடைதல், உபவாசம், வெறுந்தரையில் கிடத்தல், நீறு பூசுதல், அசைவில்லாமல் அமர்ந்திருத்தல் ஆகிய எதுவும் புனிதமாக்கி விடாது. (13)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/41&oldid=1363184" இலிருந்து மீள்விக்கப்பட்டது