பக்கம்:தம்ம பதம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் இருபத்தாறு

பிராமணன்

381. ஓ பிராமணா! வீரத்துடன் எதிர்த்து வெள்ளத்தைத் தடுத்து நில்; ஆசைகளை விரட்டி விடு. படைக்கப்பட்ட எல்லாம் அழிவடையும் என்பதை உணர்ந்து பிறகு, படைக்கப் பெறாததை நீ அறிவாய். (1)

382. (தன்னடக்கம், ஆன்மஞானம் என்ற) இரண்டு தருமங்களிலும் அக்கரை கண்ட பிராமணமனுக்கு அனைத்தையும் அறியும் ஆற்றலுள்ள அவனுக்குப் பந்தங்கள் யாவும் ஒழிகின்றன. (2)

383. எவனுக்கு இக்கரையுமின்றி அக்கரையு மின்றி [1] இரண்டுமில்லையோ, எவனுக்கு அச்சமும் கட்டுக்களும் ஒழிந்தனவோ, அவனையே நான் பிராமணன் என்று கூறுவேன். (3)

384. எவன் தியானத்துடன் உள்ளானோ, ஆசைகளற்றவனோ, நிலையான அமைதியுள்ளவனோ கடமைகளைச் செய்து முடிப்பவனோ, எவன் மாசற்றவனோ, எவன் உத்தமமான ஞானியின் முடிவான நிலையை அடைந்தவனோ, அவனையே நான் பிராமணன் என்று அழைப்பேன். (4)

386. ஆதித்தன் பகலில் ஒளி கொடுக்கிறான். சந்திரன் இரவை ஒளி செய்கிறான்; போர் வீரன் கவசம் அணிந்து பிரகாசிக்கிறான்; பிராமணன் தியானத்தில் பிரகாசிக்கிறான்; புத்தர் இரவும் பகலும்


  1. இக்கரை-புறத்தேயுள்ள ஆறு பொறிகள். அக்கரை-அகத்தேயுள்ள ஆறு புலன்கள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/90&oldid=1381890" இலிருந்து மீள்விக்கப்பட்டது