பக்கம்:தயா.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i {} § இவன் இரக்கம் காட்டறானா? கேலி பண்றானா? பயமுறுத்தறானா? இவனும் இவன் முண்டாசும். குத்து மீசையும், அடுக்கடுக்கா மூணு மோவாய்க் கட்டையும்! 1o? ரைட்டோ ஸ்ேட்

  • லலாம் முதலாளி'

மரத்தடியில், நிறுத்திய இடத்தில், நின்ற நிலையில், நின்றபடி கனவிலே வந்த காகதி, காற்றிலே எழுதிய தோற்றமாகி, பேச்சடங்கி கல்லாயும் சமைஞ்சு போச்சா? நெருங்கி வந்ததும்தான் தெரிந்தது. விழிகளின் கலங்கல். புருவங்கள் உள் வலியில் நெரிந்தன. சமுத்திரக் கரையோரம் அலை ஒதுங்கி, காற்றில் மிளிரும் நுரைபோல், உதடுகளில் அழுகை நடுங்கிற்று. அவனைக் கண்டதும் அவள் விழிகள் விரிந்தன. புலு, புலுலென கண்ணிர் கன்னங்களில் மாலை மாலையாய் வழிந்து அவன் நெஞ்சை நனைக்கையில், நெஞ்சு சுட்டது, அவள் கை அவன் முழங்கை மேல் தங்கியிருப்பதை உணர்ந்தான், சட்டென நினைவு வந்து மோதிரத்தை ஜேபியிலிருந்து எடுத்து அதற்குரிய அவள் விரலில் செலுத்தி ாைன். காத்திருந்தாற்போல் மேலே மரத்திலிருந்து இரண்டு பூக்கள் அவன் கையுள் அவள் கையில், மோதிரத்தின்மேல், அவன் செய்கைக்கு முத்திரை பொறித்தாற் போன்று உதிர்ந்தது. உடல்பூரா மின்னல் ஊடுருவிற்று. "வா. ராஜகுமாரி'

  • பாமிலி,'
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/112&oldid=886225" இலிருந்து மீள்விக்கப்பட்டது