பக்கம்:தயா.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 14 స్త్ళీiir சாமி வந்தாப்போ அந்த முகத்தில் ஏறிப்போன ஜ்வலிப்பு எனக்குக் கண் கூசுது. தலை குனியறேன், ரெண்டு கையாலும் என் முகத்தைத் தாங்கியிழுத்து மார்போடு சேர்த்து அனைச் சுக்கறா. பஞ்சிலும் மிருதுவான கடலில் நான் மூழ்கிப் போ னேனா? எனக்கு மூர்ச்சை போட்டுட்டுதா? ஜலத்துக்குள்ளே அரண்மனையில் நானே புகுந்துட்டேனா இல்லே பகல்பூரா நடந்த அசதியிலே அப்படியே தூக்கத்திலே நழுவிட்டேனா, அப்படி வருடமாத்தான் நினைவு தப்பிப் போச்சா? நிமிடம் தான் வருடமாக நீண்டு போச்சா? தெரியாது. கண் திறந்தப்போ, நினைவுகூட்டி சுத்துமுத்தும் பார்த் தால், ரயில் கிராதியண்டை நான் மட்டும் தனியாக் கிடக்கறேன். 'ராஜகுமாரி ராஜகுமாரி' குறுக்கும் நெடுக்குமா ஒடினேன். தண்டவாளம் ஒரமா நடந்து போறவங்க ஒருத்தர் ரெண்டுபேர் திரும்பி, என்னை முறைச்சுப் பார்க்கறாங்க. நடந்தது. அத்தனையும் கனவா? கண்ணைக் கசக்கிக்க றேன். கனவாயிருந்ததால்தான் நான் பிழைச்சேன். இல்லே, எனக்கு நிச்சயம் பைத்தியம் புடிச்சிடும். புடிச்சாச்சு. விரலில் ஏதோ பளிச்சிடுது. பார்க்கிறேன். மோதிரத்தில் பாம்பு தலையும் வாலையும் முடிச்சு போட்டுகிட்டு கண்ணிலே பதிச்ச பச்சைக்கல் என்னைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டுது. "நீ கண்டது கனவில்லை. உன் கற்பனையின் சத்யம்." கரையோரம் குந்திக்கிட்டுக் குழந்தையாட்டம் தேம்பித் தேம்பி அழுவறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/120&oldid=886235" இலிருந்து மீள்விக்கப்பட்டது