பக்கம்:தயா.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜிங்லி #47 வும் "க்ளோஸ். அக்காவைப் போக வர முறைச்சுப் பார்க் கிறதும், 'புஸ் புஸ் ன்னு பெருமூச்சு விடறதும் ஏன்னு நாலு நாளைக்கு முன்னால்தான் எனக்குத் தெரிஞ்சது)-இப்படிச் சொல்ல நாக்கு தவிக்கறது. ஆனால் தோணறதை யெல்லாம் சொல்லக் கூடாதுன்னு உள்ளே ஒன்னு எச்சரிகை பண்ணறது. "அத்திம்பேர்' அத்திம்பேர் மறுபடியும் அவன் பக்கமாய்க் குனியறார், ராமபிரான் அணில் மேல் குனிஞ்ச மாதிரி. அவர் முகத்தில் புன்னகை. அத்திம்பேர் ரொம்பப் பிரியமாய் இருப்பார் போலிருக்கே!” “You want to say something?” "அத்திம்பேர் அத்திம்பேர், என் அக்கா ரொம்ப நல்லவ, மனசில் ஒண்ணும் இல்லாதவ, நெருப்பில் குளிச்ச சீதையைப்போல் புனிதமானவ.” ஏன் இப்படி அவன் வாயிலிருந்து வந்தது? அவனுக்கே தெரியாது. அந்த பாஷைகூட அவனுடையதல்ல. அத்திம்பேர் நிமிர்ந்தார். ராமர் வில்! அவர் புன்னகை மாறவில்லை. “What is he Saying?” அக்கா முகம் பார்க்கச் சகிக்கல்லே, வெளுத்து, கறுத்து, செவந்து மாறி நிழலடிச்சு- ஆனா எப்படியோ சமாளிச் &#...i. ss of , ‘'என்மேல் அவனுக்கு ரொம்ப ஆசை. என்னை உங் களுக்கு சிபாரிசு பண்றான்.”-அவனைத் தன்பக்கம் இழுத்து இறுக அணைத்துக் கொண்டாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/153&oldid=886271" இலிருந்து மீள்விக்கப்பட்டது