பக்கம்:தயா.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தயா 'அம்மாவும் அண்ணாவும் ஊருக்குக் கிளம்பிப் போயிட் டா. அண்ணாவுக்கு அவசரமா ஆபீசுக்குப் போகனுமாம், வாசற் கதவைப் பூட்டிண்டல்லவா வந்திருக்கோம்! நாங்கள் இருக்கிற இடம் கொஞ்சம் ஒதுக்கு. கதவை உடைச்சிண்டு பட்டப் பகலில் ஆள் உள்ளே புகுந்தாலும் பக்கத்தில் கேட்ப் ரில்லை. சுலியாணம் முடிஞ்சு திரும்பி வரவாளை வாவென்று அழைக்கக் கூட அங்கே ஆள் இல்லையே! அதனால் அம்மா வும் போயிட்டாள்.' சேஷ ஹோமம் முடிந்த வீடு என்பது சரியாயிருக்கிறது. போட்டது போட்டபடி, கண்டது கண்டபடி, குப்பையோடு குணமும் கொட்டிவாரி இறைஞ்சு கிடக்கு. ஒரு பக்கம் புலபுலான்னு அவிழ்த்துப் போட்டுக் குவிஞ்சுக் கிடக்கும் புடவைகள், கூடம் பூரா. அrதையும் பொரியும், பூவும், என் சாமான்களுடன் சிதறிய என் மனதையும் சேர்த்துக் கட்டுகிறேன். ஆமாம். எனக்கு இனி இங்கு என்ன வேலை? நன்றி கெட்டவளே! அதற்கென்ன செய்வது? பிறந்த வீட்டு நன்றியை இனிக் கொண்டாடிக் கொண்டிருந்தால் புகுந்த வீட்டுக்கு விசுவாசம் எப்படிச் சரியாய்ச் செலுத்துவது? வண்டியேறிய பிறகுகூட என் வீட்டுக்கு நான் போகும் ஆவல் எஞ்சினுக்கு முன்னால் பாய்ந்து செல்கிறது, "தோ பாருடி!' வயலில் ஒரு யானை மேய்ந்து கொண்டிருக்கிறது. ரயிலைக் கண்டு தும்பிக்கையை உயரத் தூக்கிப் பிளிறு கின்றது. - இவர்கள் யானை பார்த்ததில்லை; நான் பட்டணம் பார்த்ததில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/174&oldid=886295" இலிருந்து மீள்விக்கப்பட்டது