பக்கம்:தயா.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் உச்சி வெயில், அவள் நடுக்கூடத்தில் படுத்திருந்தாள். வாசற்புறம் மூங்கில் கவான் மேல் படர்ந்த கொடியின் இலை சந்துகளிலும் அங்கிருந்து நேர.அதுதான் மாம்பலம் வீடு களுக்கே ஓர் அந்தரங்கம், தனிமை கிடையாதே, ரயில் வண்டி மாதிரிதானே..கொல்லைப்புறத்தில் யானைக் காதுகள் போல் ஆடும் வாழையிலைகளின் பச்சையிலும் கானல் கண கண்த்தது, - கொல்லை ரேழியில் இரண்டு அம்மாளும் காலை நீட்டி விட்டார்கள். அங்கு வாழை வழி தென்னை வழி வடி கட்டி வரும் தென்றல் ஜில் லாகி மூடிய இமைகளின் உட்புறத்தின் எரிச்சலையும் நெற்றி வேர்வையையும் ஒற்றி எடுத்தது. மாதம் முதிர முதிர, துரக்கம் அறவே கெட்டுப் ாேச்சு, இரவு முழுதும் படுக்கையில் புரண்டு புரண்டு விடி நேரத்துக்கு மிளகாயைத் தீற்றினாற்போல் இந்தக் கண்ணெரிச்சல்தான் மிச்சம். பெற்றவள் என்னதான் தனக்கு வாரிசாய்ச் சமைத்து உழைத்தாலும், புக்ககத்தில் இருக்கையில் ஒர் எச்சிலாவது இடாமல், தேய்த்த பாத்திரங்களைக் கழுவி எடுத்து, வடித்து அடுக்காமல் இருக்க முடியுமா? 'உடம்பை நன்றாய் வளைத்துக் குனிந்து நிமிரு. மாமியார் சொல்றது இப்போ வேம்பாக இருந்தாலும் இடுப்பு வலி எடுக்கறப்போ கிழவி நல்லதுக்குத்தான் சொன்னாள்னு மனசு ஒரு தரமேனும் நினைக்காமல் போகாது, நினைக்காவிட்டால் அது மனமில்லை.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/176&oldid=886297" இலிருந்து மீள்விக்கப்பட்டது