பக்கம்:தயா.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# *ē 忌むfr 'யார் என்னைப் பற்றி என்ன வேனுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள். எனக்கு யாரைப் பற்றியும் மதிப்பில்லை. எவர் ஆத்திரமும் என்னை ஒண்ணும் பண்ண முடியாது, தெரியுமா? என் இச்சையின் மிச்சம் தான் எல்லாம், தெரிஞ்சுதா? என் சீண்டலை உன்னைக் கொண்டவன்கூடத் தடுக்க முடியாது. தெரிஞ்சுதா? ஹெஹஹே!” என்று கேலியாடிற்று. தெருவில் ஒரு கோழி தன் குஞ்சுகள் புடை சூழச் சென்றது. இரை தேடலில் நொடிக்கு நொடி அதன் கழுத்து ஒயிலாய்க் குலுங்கிற்று. அலகு நாளுக்காய்க் குப்பையைக் கிளறிற்று. காற்றின் அலைப்பில் ஒன்றிரண்டு குஞ்சுகள் உருண்டன. தாய் அலறி அவைகளை அணைக்கக் சிறகுகளை விரித்தபடி அதன் முன்னிரண்டடியிலிருந்து குலுங்கக் குலுங்க வேகமாக ஓடோடி வந்தது, ஒரு நிமிடம் அந்தக் காட்சியில் தன்னை மறந்து நின்றாள். திடீரென்று அவளுக்குத் தோன்றிற்று. தாய்க் கோழியின் சிறகின் மேல் வெறித்த பார்வையை அங்கிருந்து பெயர்க்க முடியவில்லை என்று. உடல் இமை நேரத்தில் பாதி நேரம் அற்புதமான அமைதியில், சொட்டாத் அகும்பி நின்றது. அடுத்தாற்போலேயே புயல் புகுந்தது. மேலே தண்டவாளம் விழுந்தாற் போன்று வலி, திடீரென்று விலாவை முறித்தது. நிலை வாசலின் மேல் சாய்ந்தபடியே சரிந்து குன்றி. இரு கைகளாலும் இடுப்பைப் பிடித்துக்கொண்டாள். உடல் இடுப்புக்கு மேல் இடுப்புப் பூட்டில் மத்துக் கடைந்தது. முகத்தில் வேர்வை கொப்புளித்தது. - - X 'ரொய்ஞ்ஞ்ஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/182&oldid=886304" இலிருந்து மீள்விக்கப்பட்டது