பக்கம்:தயா.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 18. சுவர்களுக்கும் உயிர் உண்டோ? தனக்கு நரம்புகள் அனைத்தும் அமர்ந்திருக்கும். இந்தச் சமயத்தல் தான் சுவர் களுள் துடிக்கும் அவைகளின் உயிர்த் தாது கேட்குமோ? பூமியின் உயிர்ப்பு, படுக்கையைத் தாண்டி முதுகுத் தண்டில் விறுவிறுப்பதுபோல் தோன்றிற்று. பீதி பற்றிக்கொண்டது. எழுந்து உட்கார்ந்தாள். சத்தம் அலமாரியிலிருந்து வந்தது, அலமாரிக் கூரையில் சுவர்கள் முட்டு மூலையில் மொய்த்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து அது புறப்பட்டுக் கொண்டி ருந்ததை அப்போதுதான் கண்டாள். பிடரி சிலிர்த்தது, அவளைக் கவ்விய பயத்தின் கண்ணிருளில் அதன் உரு பளிச் சென்று பிதுங்கிற்று. பெரிதும் சிறிதுமாய் ஒட்டிக் கொண்ட இரண்டு ரத்தச் சொட்டுக்கள், தலையும் உடலும் சிவப்புக் குரூரத்தில் தெறித்த கணுக்கள், பிய்ந்த சரிகைத் துணுக்குகள் போன்ற சிறகுகளின் கனவேகத்தின் விறைப்பு. அதன் நடுவே அந்த ரத்தில் அது அலை மிதந்தது, வளைந்த கொடுக்குகள் முகத் தினின்று துருத்திக் கொண்டு நின்றன. ரம்பத்தினின்று உதிரும் மரத்துள் போல் அதன் ரீங்காரம் துருவிக் கொட்டும் தொனிப் பொடி மேலும் மேலும் அவள் மேல் சொரிந்து அவள் உருமழுங்கிய பிண்டமாய்த் தன் இடத்தில் ஒடுங்கி фнутат, மீண்டும் ஒரு சக்கரம் அடித்துவிட்டு, அது ஜன்னல் வழி வெளியே சென்று விட்டது. அந்தச் சததம் தூரத்தில் ஒய்ந்த பின்தான், அவளுக்கு உயிர் திரும்பிற்று. அலமாரியில் அதற்கென்ன வேலை? தேன் சிசாவை மூட மறந்து விட்டேனா? எழுந்து பார்த்தபின்தான் தெரிந்தது. அலமாரி மூலை யில் சிரங்கு போல் முடிச்சிட்டுக் கொண்டு மண்கூடு படர்ந்தி ருந்தது. அருவருப்பின் சீற்றம் திகுதிகுவென மண்டைக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/187&oldid=886309" இலிருந்து மீள்விக்கப்பட்டது