பக்கம்:தயா.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் - 135 எரித்து நெஞ்சுகள்-எங்கென்று தெரியவில்லை-ஏதோ ஒர் இடத்தை-எவ்வளவு பெரிதென்று தெரியவில்லை, எவ்வளவோ-பெரிது-ஒளிமயமாகிற்று. 'பூம்ரொய்ஞ்ஞ்ஞ்” இது தன் கூட்டை இழந்த வெறுங் குளவியின் கூவல் அல்ல. பூமியின் ஆதார சுருதி. தானும் சுற்றிக் கொண்டு, தன்னையும் சுற்றிக்கொண்டு சின்ன உயிர், பெரிய உயிர், தாயினின்று புழு வரை தான் தாங்கும் எவ்வுயிரும் தன்னோடு சுற்றிக்கொண்டு, தான் தேடுவது இன்னதென்று அறியாத திகைப்பில், பூமியின் ஒயாத இயக்கத்தின் ஏக்கம், அந்த படிப் படுகையில் அவள் தேய்ந்ததும் அதற்கென்றே அவளுக்கென்றே காத்திருந்தாற்போல், அங்கிருந்து, அவளிலிருந்து அவளைப் பட்டை யுரித்தாற்ப்ோன்று ஒரு வீரல் புறப்பட்டது. அலறிப் புடைத்துக்கொண்டு மாமியாரும் தாயாரும் ஓடி வந்தனர். மாடியில் "திடும் திடும்'. அக்கம் பக்கத்தில், எதிரே, வாசலில், கூட்டமாய்க் குரல்கள், யாரோ கூடத்து ஸ்விட்சை'ப் போட்டனர். கண்களை இறுக மூடியவாறு. உட்கார்ந்த நிலையிலேயே அவள் உடல் மருள் கண்டாற்போல் ஊஞ்சலாடிற்று. மடியில் குழந்தை நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்தான். அவள் கணவன் அவளைத் தோளைப் பிடித்து உலுக்கி அதட்டினான். அவனுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது கோபம் கோபமாய் வந்தது. மானம் போகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/191&oldid=886314" இலிருந்து மீள்விக்கப்பட்டது