பக்கம்:தயா.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ફ - - §§3tr 'யாரோ பிச்சைக்கு வந்தவளை விரட்டிட்டேனாம்-' காகில் வாங்கிக் கொண்டதும் வாங்கிக் கொள்ளாத துமாய் ஸ்ம்பத் மாடியேறினான். ஒரு நாளைப் பார்த்தால் போல், ஒரு நாளைக்காவது ஆபீஸைப் பத்து மணி முள் முனையில்லாமல் அடைந்ததில்லை. தினமும்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். வருஷக் கணக்காய்!- இதென்ன வீடோ, என்ன குடித்தனமோ.” தய ஜன்னலண்டை நின்றிருந்தாள். அரவம் கேட்டுத் திரும்பிச் சட்டெண, கண்ணில் ஏதோ தூசி விழுந்த மாதிரி கசக்க முயன்றாள். "என்ன தயா? இந்தப் பயலைப் பார்த்துக்கொள்ளக் கூடாதா?’ அவன் சொல்லி முடியும் வரை பயல் காத்துக் கொண்டிருக்க வில்லை. அத்தே! அப்பா கையிலிருந்து தாவி விட்டான். இரண்டு அடி முன் ஒடி வந்து தாங்கிக் கொண்டாளோ பிழைத்தது, "என்ன மூக்கு நுனி சிவந்து பட் பட் பண்றது? முட்டி ஜலதோஷமோ?’’ அவள் முகத்தில் புன்னகை கட்ட வில்லை. 'ரொம்பக் கோபமோ? கோபம் வராதவாளுக்கு கோபம் வந்தால் பயமாயிருக்கிறதே!” 'கோபிக்க நான் யார் அண்ணா? எனக்குக் கோபம் இல்லை. மனம் தான் குழம்பறது. மறுபடியும் நிலைப்படும் வரை அவஸ்தை தானே!” 'தயா, ஒண்னு சொல்கிறேன். வருவோருக்கெல்லாம் போடுவதனால், நாமும் ஒடு எடுத்துக்கொண்டு அவர்களோடு கிளம்பிவிட வேண்டியதுதான்! பிச்சையெடுப்பதில் வெற்றி பெறுவது எப்படி என்று முறை வகுத்துப் புஸ்தகம் போடும் அளவுக்கு அது தொழிலாய் முற்றிவிட்டது தெரியு மோன்னோ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/22&oldid=886319" இலிருந்து மீள்விக்கப்பட்டது