பக்கம்:தயா.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தயா அவளுடைய விரல்கள், தந்திகளின் மேல் தாவிக் குதிப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே, அந்நாதம் : மனத்தைத் தன்னுடன் பினைத்துக்கொண்டது. அவள் கண்கள் திடீரென நிறைந்து கண்ணிர் கன்னங் களில் வழிந்தோடிற்று. அவன் அதைப்பற்றி ஒன்றும் செய்ய வில்லை. அவளும் துடைத்துக் கொள்ளவில்லை. அதுவே அவளுக்குத் தெரியுமோ தெரியாதோ? பக்தியின் பரவசமா? ஆனால் அவள் பாட்டைக் கேட்கையில் அவனுக்கு உருக்கம் ஏற்படவில்லை. ஏதோ சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாததொரு சங்கடந்தான்; இன்னதுதான் பாடுகிறாள் என அறியக்கூட முடியவில்லை, அவள் எழுப்பிய ஒசையின் புதுமையைத்தான் நுகர முடிந்தது. இடது கையால் மெதுவாய் அவன் முகத்தை அவள் தொட்டாள். விரல்கள் நெற்றியின் சரிவிலிருந்து ஆரம்பித்து: புருவங்களை விளம்பி, மூக்குத் தண்டின் வழி கீழிறங்கி, உதடுகளை எழுதி, கன்னங்களைத் தடவி நெளிந்தன. அவள் விரல் நுனிகளின் வழி லேப்பொறிகள் பறந்து அவனை எரித்தன. புதிதாய் ஓர் எழுத்தை எழுதக் கற்றுக்கொண்ட குழந்தைபோல், அவள் முகம் மலர்ந்தது. கண்கள் மகிழ்ச்சி யில் அகல விரிந்தன. அவனுக்கு மூச்சுத் திணறிற்று. அருவருப்பில் உடல் குலுங்கிற்று. கழுத்தில் இறங்கிக் கொண்டிருக்கும் அவளுடைய கையைச் சற்றுக் கடுமையாகவே இழுத்துப் பிடித்துத் தடுத்தான். அவள் விடாது பயிலும் சுருதியும், அறையின் மங்கிய வெளிச்சமும் குரல் வளையை அமுக்கின. 'இதென்ன, புது விளையாட்டு'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/28&oldid=886325" இலிருந்து மீள்விக்கப்பட்டது