பக்கம்:தயா.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேரங்கள் 55 இருந்தும் ஆபதாமபஹத்தாரம்' சொல்கிறார். தலைப்பாகையை முன்னும் பின்னுமாய் ஒருபக்கமாய் சரிய மாட்டிக் கொண்டு அலறிப் புடைத்துக்கொண்டு ஒடி வருகிறார். டேப்பா!' ஒவ்வொருத்தனும் என்னென்ன வேஷம் போடுகிறான்' - நாற்காலியை முன்னுக்கிழுத்துக்கொண்டு உட்கார் ந்தான். "என்னத்தை எழுத' - அவன் இடம் ஜள்னலுக்குப் பக்கத்தில். ஆபீஸின் நாலாவது மாடி உயரத்திலிருந்து, கீழே பஸ்களும் மோட்டார் களும் வண்டிகளும், மரவட்டைகளும், வண்டுகளும் பூச்சிகளுமாய் ஊர்ந்தன ஆங்காங்கே, புடவைகளின் சிவப்புகளும் பச்சைகளும் சின்னஞ்சிறு வர்ணக் காயிதத் துண்டுகள் காற்றில் அலைவதுபோல் விட்டுவிட்டு நெளிந்தன. இங்கிருந்து தற்செயலாயோ வேனுமன்ெற்ோ ஆள் விழுந் தால் ஒரு எலும்புகூட முழுசாகத் தேறாது. ஆயினும் மூன்று நாட்கள்-பதினஞ்சு, பன்னிரண்டு அஞ்சு நிமிஷங்கள் நேரங்கழித்து வந்ததற்கு சமாதானம் எழுதியாகணும். - என்னத்தை எழுத? உள்ளதை எழுதினால் எடுபடு மோ? இவர்களுக்குப் புரியுமோ? - நேரம் கழித்து வந்ததற்கு மிகவும் வருந்துகிறேன். இனி இம்மாதிரி நேரிடாதபடி-” 2 உமா சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள். அவள் கைடம்ளரில் ஆவி பறந்தது. "என்ன இப்படிக் கொதிக்கிறதே? அடுப்பில் சுட வைத் தாயா? இல்லை. வயிற்றிலேயே கொஞ்ச நாழி வைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/61&oldid=886362" இலிருந்து மீள்விக்கப்பட்டது