பக்கம்:தயா.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ $fiłfr சொல்லி ஆகிவிடாது. உலகம் உற்பவித்த நாள் முதலாய் அதன் சோகம். தன் வண்டல்கள், வருடங்களாய்த் தெளிந்த பணி நீராகி, இரண்டு குளங்களில் தேங்கி, அக்குளங்களுக்கு விழிகள் எனப் பெயரிட்டாற் போல் அவ்வளவு மகத்தான துயரம். இந்தத் துயரம் என்னால் சசிக்க முடியவில்லை. அழுது அழுது கண்ணிராய்க் கரைந்து இவ்விழிகளுள் கலந்து விட மாட்டேனா. அப்படிக் கலந்து நானே அற்றுப் போனா லும் என் வேதனையின் விண் விண் அற்றுப் போகுமோ? பாம்பின் விழிகள் அதன் கரைகள் கரைந்து வேறாய் இழைகின்றன. ஆ. புரிகிறது. நான் இவ்வீட்டுக்குள் வரும் வழியில் புற்றறையில் மேய்ந்து கொண்டிருந்தது. என்னை நிமிர்ந்த மான் விழிகள் அல்லவா இது பயமற்ற பார்வைஇல்லை இது. யார், சக்குவா? "இன்னும் விடியல்லியா பாலு? உன் அம்மாவுக்குப் பல் தேய்க்க வென்னீர் பேஸின் எல்லாம் கொண்டு வந்தேன். கதவு திறந்திருந்தது. எட்டிப் பார்த்தேன். எத்தனை நாழியா உன்னைப் பார்த்துண்டிருக்கேன் தெரியுமா? அம்மா கூட கண்டிப்பாள், துரங்கறவாளை அப்படி கவனிக்கலாகாதுன்னு அது என்ன சாஸ்திரமோ? ஆனால் அதுவே எனக்கு ஒரு கெட்ட பழக்கமாய் போச்சு. நீ தூங்கறபோது ஏதோ ஒரு தினுசில் அழகாய்த் தானிருக்கே. ஆனால் பார்த்தால் ஏதோ பாவமாயிருக்கு, ஏன்? ரெண்டு மூனுதரம் உன் மூச்சு தேம்பித்து, அடிச்ச குழந்தை அதே சாக்காய் தூங்கிட்டாப் போல. ஏன்? மறுபடியும் நம்ம ரெண்டுபேரும் சண்டை போட்டுக்கறாப்போல கணாக் கண்டாயா? ஏன். பேசவே மாட்டேன்கிறே? குரல் ரொம்பவும் கட்டை ஆயிடுத்தா? ஆண்களுக்கு குரல் மாறினால், சிலபேருக்கு ரொம்பக் கண்றாவியாயிருக்குமாமே. நிஜமாவா? குரல் மாறினப்புறம் ஆயுசுக்கும் அதே குரல்தானாமே? அதுதான் குரலைக் காட்ட மாட்டேன்கிறையா? அதென்ன, அவ்வளவு பெரிசா? என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/92&oldid=886396" இலிருந்து மீள்விக்கப்பட்டது