பக்கம்:தயா.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tanru urrir 93 கண்ணிர் பெருகி கன்னங்களில் வழிந்தோடியது. "என்றைக்கேனும் இப்படி ஏதேனும் நேர்ந்துே மோன்னு நான் வயிற்றில் நெருப்பைக் கட்டிண்டுதாணி ருக்கேன். அவளும் வெகுளியாயிருக்காள். நான் என்ன செய்வேன்? ராமா, என்ன செய்வேன்?" மாமி வாய்மேல் முன்றானையை முடிக்கொண்டு மெதுவாய்க் கீழே விறங்கிப் போகிறாள்-தள்ளாடு கிறாள். நான் பஸ்மமாய்க் குமுங்கிக் குன்றி விட்டேன், என்னுள்ளேயே நான் இல்லை, துரங்கிவிட்டேனா, நினைவிழந்தேனா, இறந்து போனேனா என்மேல் கூரை சரிந்து விழுந்து விட்டதா? எல்லாமே ஒன்றாய்த்தானிருக்கிறது. அறையில் இருள் சூழ்ந்திருக்கிறது. இரவா? இருட்டா தெரியவில்லை, தெரிந்து என்ன ஆகவேண் டும்? எங்கோ கடிகாரம் மணியடிக்கிறது. எத்தனை தரம்? இப்போ தெரிந்து என்ன ஆக வேண்டும்? வீடே அரவம் அடங்கிக் கிடக்கிறது. இனி எனக்கு இங்கே என்ன வேலை? - வீடு என்னும் காடு, எழுந்து இருளில் என் வழியைத் துழாவிச் செல் கிறேன். கால்போன வழி.

பால சந்த்ரா!' -

ஓ, இங்கே வந்திருக்கிறேனா? வாசலில் நீற்கிறேன். நான் உள்ளே போகவில்லை. ஏன் போகனும்: அம்மாவே எனக்கு அவள் குரலில்தான் வாழ்கி நாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/99&oldid=886403" இலிருந்து மீள்விக்கப்பட்டது