பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கடப்பாரையும்சிறுவர் முயற்ச்சியும்



"ன் இப்படிக் கடப்பாரையைக்கொண்டு தோண்டச் சொல்லுகிறானே! அதுவும் இருட்டில் உட்கார்ந்துகொண்டு ஆராய்ச்சிச் செய்யச் சொல்லு கிறானே. துப்பறியும் நிபுணர் தங்கமணி என்று ச ர் டி பி கே ட்கொடுத்துவிட்டோமே, அதன் பிறகாவது விஷயத்தை விளக்கிச் சொல்லக் கூடாதா?" என்று நெற்றியில் வழியும் வேர்வையைத் துடைத்துக்கொண்டு கேட்டான் சுந்தரம்.

'நீங்கள் ஒய்வு எடுக்கும்போது வேண்டுமானால் சொல்லுகிறேன். இடையிடையே இப்படி ஒய்வு எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்; அப்போது மேலும் விளக்கமாகக் சொல்லுகிறேன்' என்றான் தங்கமணி. 'அதுவரை வாயை மூடிக்கொண்டிருங்கள்' என்று எச்சரித்தான் தங்கமணி.

“எதற்காக இருட்டில் வேலை செய்யச் சொல்லுகிறாய்? அதையாவது சொல்' என்று கேட்டான் சுந்தரம்,