பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
30



'இதை விளக்குவது சுலபம். பகலில் என்றால் பல பேர் கோட்டைக்கு வந்துகொண்டு இருப்பார்கள். வி ஷ ய ம் வெளியாகிவிடும். அதற்காகத்தான் சப் இன்ஸ்பெக்டர் முத்துசாமி அவர்கள் இருட்டில் ஆராய்ச்சி .ெ ச ய் வ ைத யே ஆதரிப்பதாகத் தெரிவித்தார். அநாவசியமாக வீண் வதந்திகள் பரவ வேண்டாம் என்று கண்டிப்பாக அவர் சொல்லி விட்டார். நானும் சம்மதம் கொடுத்திருக்கிறேன்' என்றான் தங்கமணி.

'சரி, அது போகட்டும். கடப்பாரையைக் கொண்டு தோண்டச் சொல்லுகிறாயே, அது எதற்கு? புதையல் ஏதாவது கிடைக்குமென்ற எண்ணமா? சுந்தரத்தால் அதற்குமேல் தாங்கமுடியவில்லை. விஷயம் அறிந்துகொள்ள அத்தனை ஆர்வம் அவனுக்கு.

'கடற்கரைப் பகுதியிலே மாசிலா நாத சுவாமி என்று, இடிந்துபோன ஒரு கோயில் இருக்கிறது. நீங்களும் கவனித்திருப்பீர்கள். அதில் ஏதாவது பழங்கால நாணயங்கள் இருக்கின்றனவா என்று தோண்டிப் பார்ப்பதுதான் என்னுடைய நோக்கம்.'

'என்ன, கொல்லிமலைக் குள்ளன் வேலையை ஆரம்பிக்கிருயா? அவன் சிலையைத் திருடினன். நீ அஸ்திவாரத்தையே தகர்ப்போம் என்கிறாய்” என்றான் சுந்தரம்,