பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
33



'ஏதோ முக்கியமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருப்பார்கள். அவர்களைப்பற்றி நீ கவலைப்பட வேண்டாம். பொறுப்புக் கொடுத்துவிட்டால் தாமாகவே எல்லாம் செய்துகொள்வார்கள்' என்று அன்புடனும் க வ லை யி ன் றி யு ம் சொன்னார். வள்ளிநாயகியும் அவர் அன்பான மறுமொழியைக் கேட்டுச் சமாதானம் அடைந்தாள். முக்கியமாகத் தங்கமணி மேல் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தது.

சிறுவர்களின் கடப்பாரை திப் திப் பென்று இரவு நேரத்தில் ஒலித்துக்கொண்டு இருந்தது.

சுந்தரத்திற்குக் கொஞ்சம் சலிப்பு ஏற்பட்டு விட்டது. எவ்வளவு ஆழந்தான் இப்படித் தோண்ட வேண்டுமோ? அதனாலே சலிப்பு.

"அந்த உலோகக் கண்டுபிடிப்பான் என்ன சொல்லுகிறது; உலோகம் இருப்பதை மட்டும் சொல்லுகிறதா? எத்தனை அடி ஆழத்தில் என்று திட்டவட்டமாகச் சொல்லித் தொலைத்தால் நன்றாக இருக்குமே. இத்தனை கண்டுபிடித்தவர்கள் அதையும் ஏன் கண்டுபிடிக்காமல் போய்விட்டார்கள்?' என்று பெருமூச்சு விட்டான் சுந்தரம்.

'அ து வு ம் தா ன் சொல்லுகிறதே. இந்தக் கருவியைப் பயன்படுத்தினால் எத்தனை அடி ஆழத்தில் என்று கண்டுபிடிக்கலாம். அதன் ஒலியைக்