பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
52



தங்கமணி கூறியவாறே தரங்கம்பாடிக்கு உ ட னே விரைந்தார்கள், போலீஸ் சப்இன்ஸ் பெக்டரும் மற்ற ஜவான்களும்.

அவர்கள் தங்குமிடத்திற்கு விரைந்ததும் சர்ட்டி பிகேட்கள் எல்லாம் வந்து தயாராகக் காத்துக் கொண்டிருந்தன. அவற்றை உடனே போலீஸ் சப்இன்ஸ்பெக்டரிடம் கொண்டுசென்று ஒவ்வொன்றாகப் காட்டினான் தங்கமணி. போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் முற்றிலும் திருப்தியடைந்ததோடு "எங்களால் ஆன உதவியைச் செய்கிறோம்' என்று உற்சாகமாகப் பதிலளித்தார். போலீஸ் சப்இன்ஸ்பெக்டருக்குத் தாங்களும் அந்தக் கண்டுபிடிப்பில் பங்கு கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாக உண்டாயிற்று. தங்கமணி முதலில் உதவி ஒன்றும் தேவையில்லை என்று சொல்ல நினைத்தான். ஆனால், இன்ஸ்பெக்டருக்கு மறுபடியும் சந்தேகம் உண்டாகும் என்று நினைத்து அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டான். மேலும், ஜிப்ளிகளைக் கையும் களவுமாகப் பிடிக்கவேண்டுமாதலாலும், கண்ணகிக்கு ஏதாவது தீங்கு நேராமல் இருக்கவேண்டும் என்பதாலும் அந்த எண்ணத்தை உடனே வேறு யோசனையின்றி ஒப்புக்கொண்டான்.

'உங்கள் உதவி எங்களுக்கு நிறையவேண்டும். ஜிப்ஸிகளைக் கைது செய்தாக வேண்டுமல்லவா? ஆகையால் உடனே புறப்படுவது நல்லது என்று அவசரப்பட்டான் தங்கமணி,