பக்கம்:தரங்கிணி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரங்கிணிை

T

தோமியார் கோயில் கோபுரத்தின் கூர்மையான சிகரம் நீலவான் முகட்டை எட்டிப்பிடிக்க முயன்று கொண்டிருப்பதுபோல் காணப்பட்டது. ஆகாயத்துக்கும் கடலுக்கும் உள்ள நிற ஒற்றுமையை வேறுபடுத்திக் காட்ட, மாலை மஞ்சள் வெய்யில், தன் மாற்றில்லாத பசும் பொன் நிறத்தை வானத்தில் படரவிட்டு, விதவிதமான கோலங்களே வண்ண ஒவியங்களாகத் தீட்டிக் கடல்நீரைப் பளபளக்கச் செய்து கொண்டிருந்தது. காற்றில்ை உந்தித் தள்ளப்பட்டுக் கரையோரத்தில் வெண்ணுரைகளைக் கக்கிக்கொண்டு வேகமாக வரும் அலைகளின் ஒசையுடன் போட்டி போடுவதுபோல, கரையோர மணற்பாப்பை அடுத்து உள்ள செந்தோம் நெடுஞ்சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த நாலைந்து இளம் பெண்களின் சிரிப்பு அலை, தென்றற்காற்றில் மிதந்து வந்துகொண்டி ருந்தது. இசையரங்கில் சுருதி சுத்தமாகப் பாடும் பிரபல பாடகி யொருத்தியின் இனிமையான சங்கீதத்தில், கற்றுக் குட்டியான பிடில் வித்துவான் ஒருவன் தன் வாசிப்பின் அபஸ்வரத்தைப் பிடிப்பதுபோல, அப் பெண்மணிகள் எழுப்பிய இனிய நகையொலியினிடையே, காக்கைகள் கரையும் ஓசை கேட்கலாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/10&oldid=575201" இலிருந்து மீள்விக்கப்பட்டது