பக்கம்:தரங்கிணி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

$99

இவ் வியப்பு நீங்காத நிலையிலேயே அவன் குனிந்து தரங் கிணி வீசியெறிந்த கடிதத்தை எடுத்தான். அடுத்து, தரங் கிணி பின்கட்டுக்குப் போய் விடை பெறுவது கேட்டது. "உன் வேலையைப் பார் காதரீன்! நான் போய் அப்புறம் வருகிறேன்."

"என்ன அவசரம்? தரங்கிணி! இரேன்: போகலாம். 'இல்லை போகனும்! என்ற தரங்கிணி, "போய் வரேன், அம்மா! என்று செல்லம்மாளிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட்டாள்.

தரங்கிணி போவதை ஜன்னல் வழியாகப் பார்த்தான் ஜோஸப். பின், தன் கையிலிருந்த அவள் கடிதத்தையும் பார்த்தான். 'தரங்கிணி எனக்கு எதற்காகக் கடிதம் எழுதினள்? என்ன எழுதியிருப்பாள்? மறுபடியும் தன்னிடம் நான் வம்புசெய்யப் போகிறேனென்று கருதி ஏதாயினும் எச்சரித்து எழுதியிருப்பாளோ? ஒருவேளை... கையில் கடிதத்தை வைத்துக்கொண்டு பலவிதமாகக் கற்பனை ஏன் செய்துகொண்டிருக்கவேண்டும்? மனத்தைப் போட்டு ஏன் உலுப்பிக் கொண்டிருக்க வேண்டும்? தன் பைத்தியக்காரத்தனத்துக்காக அவன் தானகச் சிரித்துக் கொண்டான். திடீரெனக் காதரின் வந்து அதைப் பார்த்து விடப் போகிருள் என்ற எண்ணத்தால் அவன் சட்டைப் பையில் வைத்துக்கொண்டான். பின்னர் அவன் ஒசைப் படாமல் மேன்மாடிக்குப் போனன். தனியிடத்துக்கு வந்தும் கடிதத்தைப் பார்க்க அவனுக்குத் தைரியம் வரவில்லை. வெகு நேரத்துக்குப் பின்பே அவன் சட்டைப் பையிலிருந்து கடிதத்தை எடுத்துப் பார்க்கலானன். தரங்கிணியின் பேச்சில் இனிமை இருப்பதுபோல.ே எழுத்திலும் அழகு இருந்தது கண்டு அவன் வியப்புற்ருன் இந்த எண்ணத்துடன். அவள் கடிதத்தை அவன் மனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/100&oldid=1338516" இலிருந்து மீள்விக்கப்பட்டது