பக்கம்:தரங்கிணி.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

100

"உனக்கு நான் கடிதம் எழுதியிருப்பதைக் கண்டு நீ ஆச்சரியப்படுவாய் என்று அறிவேன். முக்கியமான ஒரு விஷயத்தைக் குறித்து உன்னிடம் அவசரமாகப் பேச வேண்டும். ஆதலால் தயவுசெய்து நாளை மாலை செந்தோம் கடற்கரையில், என்னைச் சந்திக்க வேண்டு கிறேன். என்னை அதிக நேரம் காக்க வைக்காதபடி ஐந்து மணிக்கே தவருமல் வரவேண்டும்.: -

யார் யாருக்கு எழுதியது என்று யாராயினும் தற் செயலாகப் பார்த்தாலும் தெரிந்துகொள்ள முடியாதபடி, தரங்கிணி சாதுரியமாகக் கடிதம் எழுதியிருந்ததைக் க்ண்டு ஜோஸப் முன்னைவிட வியப்பு கொண்டான். அவள் எதற்காக்க் கடிதம் எழுதியிருந்தாலும் சரி, அவள் குறிப் பிட்டிருந்த நேரத்திலும் இடத்திலும் சந்தித்து விடுவது என்ற முடிவுடன், அவன் தன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டான். .

தரங்கிணியின் கடிதத்தைப் படித்தபின், ஜோஸபுக்கு வேறெதிலும் மனம் ஒட்வில்லை. ஒவ்வொரு கணமும், நிமிடமும், மணியும், நாளும் கழிவது ஒரு யுகமாயிருந்தது. மறுநாள் மாலே அவன் தரங்கிணி குறிப்பிட்டிருந்த நேரத் துக்கு முன்பாகவே கடற்கரைக்கு வந்துவிட்டான். ஐந்து அடிக்கி ஐந்து நிமிடம் இருக்கும்போது, தரங்கிணி செந்தோம் சர்ச் வழியாகக் கடற்கரைக்குள் வந்து .* இமெண்டுப் படிகள் வழியாக மணற்பரப்பில் இறங்கிக் கின்ரியை நோக்கி நடந்துவருவதை அவன் கண்டான். நீல வானத்திலிருந்து கெந்தோம் சர்ச் கோபுர உச்சியைக் குறியாக வைத்து, தேவதை (Angel) யொன்று பூமிக்கு வருவதுபோல் அவனுக்குப்பிரமை உண்டாயிற்று.

தரங்கிணி மணற்பரப்பில் நடக்கத் தொடங்கியதுமே, நாலா பக்கமும் பார்த்துக்கொண்டே வந்தாள். இதைக் கவனித்துவிட்ட ஜோஸப் அவசரமாக எழுந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/101&oldid=1338517" இலிருந்து மீள்விக்கப்பட்டது