பக்கம்:தரங்கிணி.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

101

"நான் இங்கே இருக்கிறேன், தரங்கிணி" என்று குரல் கொடுத்துக்கொண்டு, எதிர்நோக்கி ஓடி வரலான்ை.

தரங்கிணி, தன் கரத்தை அவன் பக்கம் நீட்டிச் சைகை காட்டிவிட்டு, யாரும் இல்லாத இடமாகப் பார்த்துப்போய் உட்கார்ந்தாள். ஜோஸ்பும் அவளுக்கு எதிரில் எட்டி அமர்ந்தான்.

"இப்படிச் சற்று சமீபமாகவே வந்து உட்கார். நாம் பேசுவது பிறர் காதில் விழக்கூடாது. நம்மைப் பார்த்து விட்டு யாரும் சந்தேகப்படவும் கூடாது. தரங்கிணி அவனை ஏறிட்டுப் பாராமலே எச்சரிக்கை செய்தாள்.

ஜோஸப் நகர்ந்து அவளுக்கு மிகச் சமீபமாக அம்ர்ந்தான். - -

ஆனல். அவன் ஆவலுடன் எதிர்பார்த்தபடி தரங்கிணி உடனே பேசவில்லை. அவன் தலைகுனிந்தவாறு சிந்தனையில் ஆழ்ந்துவிட்டாள். அவன் வாட்டமுற்ற அவள் முகத்தையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந் தான். அவள் தன்னிடம் என்ன சொல்லப் போகிருளோ, என்ன பேசப்போகிருளோ என்று அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். விநாடிகள் நிமிடங்களாகி, நேரம் இயற்கை கதியில் போய்க்கொண்டிருந்தது. ஆனல், தரங்கிணி வாயைத் திறக்கவில்லை. ஜோஸப் பொறுமை இழந்துபோனன். அவன் அவளை ஏதோ கேட்க வாயைத் திறந்தான். ஆனால், அதே சமயத்தில் அவள் ஏதோ சொல்ல வாய் திறப்பதுபோல் அவனுக்குத் தென்பட்டது. ஆகவே, அவன் தான் கேட்க எண்ணியதைக் கேட்காமல் நிறுத்திக்கொண்டான்.

தரங்கிணி ஏதோ அவனிடம் சொல்ல வாய் எடுத்தாள். ஆனல், அதை எப்படிச் சொல்வது என்று கருதித் தயக்கங் கொண்டாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/102&oldid=1338518" இலிருந்து மீள்விக்கப்பட்டது