பக்கம்:தரங்கிணி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

102

அவள் என்ன சொல்லப்போகிருள் என ஆவலுடன் இருந்த ஜோஸப், இது கண்டு பொறுமையிழந்தவனாய், 'கிண்கிணி இல்லையில்லை; தரங்கிணி! நீ ஒன்றுக்கும் தயங்க வேண்டாம். என்னிடம் சொல்ல விரும்பியதைத் தாராள மாகச் சொல்லலாம்' என்று கூறினன். -

தரங்கிணியின் சிவந்த உதடுக்ள் துடிதுடித்தன. ஆனல், வார்த்தைகள் வாயிலிருந்து வெளிவரவில்லை.

ஜோஸப் தன் மன உணர்ச்சியை அடக்கமாட்டாது பேசின்ை: "தரங்கிணி, என்னைக் கண்டிக்க உனக்கு உரிமை யுண்டு. நான் உனக்குச் செய்துள்ள தீங்குக்கு நீ என்ன தண்டனை வேண்டுமானலும் தரலாம்.”

தரங்கிணியின் கண்களிலிருந்து நீர் ஆருக வழிந் தோடலாயிற்று.

அவள் கண்ணிர் உகுப்பதைக் கண்டு ஜோஸப் பதறிப் போனன். "தரங்கிணி! ஏன் அழுகிருய்? காரணத்தைச் சொல்லமாட்டாயா?” - -

அப்போதும் தரங்கிணியால் பேச முடியவில்லை. அவள் தன் முந்தானேயால் மெல்லக் கண்ணிரைத் துடைத்து நிறுத்த முயன்ருள். - - பரிவுடன் அவளை நோக்கிய ஜோஸ்ப், "தரங்கிணி! உண்மையாகச் சொல்லுகிறேன். நான் முற்றிலும் திருந்தி விட்டேன். இனி, மறந்துங்கூட நீ இருக்கும் திசையையும் திரும்பிப் பார்க்கமாட்டேன். நிச்சயமாக நீ இதை நம்ப லாம். உன்னிடம் இதுவரை வரம்புமீறி நடந்து வம்பு செய்ததற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளு கிறேன். - -, % - . தரங்கிணி அவன் முகத்தைச் சிலகணங்கள் ஏறிட்டுப் பார்த்துவிட்டுத் தன் முகத்தை மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழலாளுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/103&oldid=1338519" இலிருந்து மீள்விக்கப்பட்டது