பக்கம்:தரங்கிணி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

I03

ஜோஸபின் உடம்பு முழுவதும் துடிதுடித்து ஆட லாயிற்று. -

"ஐயோ! தரங்கிணி! நான் இவ்வளவு சொல்லியும் நீ இன்னமும் என்னை நம்பவில்லை போலிருக்கிறதே! இதற்குமேல் நான் உனக்கு எப்படிச் சொல்லி நம்ப வைப்பேன்? நீ முன்னெருநாள் என்னைக் கண்டித்துப் பேசியது எனக்கு ஞானஸ்நானஞ் செய்வித்தது போலா யிற்று. என் தங்கை எதிர்பாராதவாறு வந்து என்ன என்று கேட்டபோது, நீ என்னைக் காட்டிக் கொடுக்காம்ல் பெருந்தன்மையாக நந்டதுகொண்டது எனக்குப் பாவ மன்னிப்பு அளித்ததுபோல் இருந்தது. நீ என்மீது பொழிந்த வசவையும் காரி உமிழ்ந்ததையும் புனிதநீர் தெளித்து உபதேசஞ் செய்ததுபோல் கொண்டு நான் முற்றும் திருந்திவிட்டேன். புது மனிதனுகி விட்டேன். ஆமாம்; வயதில் மிகச் சிறியவளானலும், புத்தியில் பெரியவளான நீ, உன் பெருங்குணத்தால் என்னிடங் குடிகொண்டிருந்த சாத்தானை விரட்டியடித்துவிட்டு, என்னை அடியோடு புது மனிதனுக்கிவிட்டாய். இதற்காக நான் என் ஆயுள் உள்ள மட்டும், உனக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். நீ என்னேத் தீயில் குதிக்கச் சொன்னலும் தயங்காமல் உடனே குதிப்பேன். உனக்காக எது செய்யவும், ஏன்? என் உயிரைக் கொடுக்க வும் சித்தமாயிருக்கிறேன். ஆனால், உன் மைவிழிகள் கலங்கிக் கண்ணிர் சிந்துவதை மட்டும் என்னல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது-"

ஜோஸ்பின் இந்த உருக்கமான பேச்சு, துயரத்தில் தோய்ந்திருந்த தரங்கிணியையும், தன் நிலையில் சுதாரித்து நிற்கச் செய்யலாயிற்று. எனவே, அவள் இரண்டாவது முறையாகக் கண்களைத் துடைத்துக் கொண்டு, அழுகையை நிறுத்த முயன்ருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/104&oldid=1338520" இலிருந்து மீள்விக்கப்பட்டது