பக்கம்:தரங்கிணி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

104.

ஜோஸப் தரங்கிணியை மறுபடியும் நோக்கி "தரங் கிணி! நீ என் அன்புச் சகோதரியின் ஆருயிர்த்தோழி என்பதையும் சிந்தித்துப் பார்க்காமல், நான் உன்னை ஆதி முதலே பரிகாசஞ் செய்துவந்தது உண்மை, நான் அதை மறுக்கவில்லை. நான் உன்னைக் கேலி பண்ணியதற்குக் காரணம் உன்மீது எனக்கு ஏற்பட்ட அன்பேயாகும். நீ முதன்முதல் என் சைக்கிளில் மோதியபோதே என் இதயத்திலும் மோதிவிட்டாய். என் தங்கையுடன் எங்கள் வீட்டுக்கு வந்த புதிதில் நீ பேசிய பேச்சின் இங்கிதமும், எங்கள் ஏசுமீது நீ பாடிய பாடல்களின் இனிமையும் என்னை வெகுவாகக் கவர்ந்து விட்டன. அமைதி தவழும் உன் அழகிய முகமும் இனிய குரலும் என்னை மயக்கி நமக்கிடையேயுள்ள ஏற்றத்தாழ்வுகளையும் மறக்கச் செய்துவிட்டன. உன்னை நோக்கித் தாவும் என் இளம் உள்ளத்தை என்னல் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆகவே, நான் உன்னிடம் ஏதாவது பேசிச் சிநேகஞ் செய்து கொள்ளுவதற்குப் பலவிதமாக முயன்றேன். ஆனல் நீ அதற்கு எவ்வகையிலும் இடந்தரவில்லை. அதல்ை, எனக்கு உன்மீது கோபம் உண்டாயிற்று. அதிலிருந்து உன்னைப் பரிகாசஞ் செய்யத் தொடங்கினேன். உன்னைப் பார்க்கும் போதெல்லாம் குறும்பாக ஏதேனும் பேசி உன்மீது எனக்குள்ள ஆசையை வெளியிட்டு வந்தேன். நீ என்னை அலட்சியப்படுத்தப் படுத்த என் பரிகாசமும் வம்பும் அதிக - மாயின. மிகவும் சாந்தகுணங் கொண்ட உன்னையும் ஒரு நாள் கோபங்கொண்டு கொதித்து எழச் செய்ததென் ருல், என்னுடைய விஷமச்செயல்கள் எவ்வளவு எல்லை மீறிப் போயிருக்கும் என்று நான் சிந்தித்துப் பார்த்த போது, எனக்கே வெட்கமுண்டாய் விட்டது. நீ மட்டும் அன்று என் அகம்பாவத்துக்கு அடிகொடுத்து ஆத்திர மாகக் கண்டித்துப் பேசியிராவிடில், என் விஷமப் புத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/105&oldid=1338521" இலிருந்து மீள்விக்கப்பட்டது