பக்கம்:தரங்கிணி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

105

வளர்ந்துகொண்டேதான் போயிருக்கும். அந்த மட்டும் கர்த்தர் என்னைக் காப்பாற்றினர். கூடிய சீக்கிரம், பர மண்டலத்திலுள்ள எங்கள் பிதாவிடம் பாவமன்னிப்புக் கோரப்போகிறேன். அதற்குமுன் என்னை மன்னித்துவிடு, தரங்கிணி என்னை மன்னித்துவிடு. மன்னிக்க மாட் டாயா...?’

பொங்கிவரும் மனத்துயரை அடக்கமாட்டாமல் தரங்கிணி கதறலானள். "நீ பேசினது போதும், ஜோஸப்! நிறுத்து; என்னைப் போட்டுக் கொல்லாதே!.

ஜோஸப் வாயைப் பொத்தியவாறு, "நான் இனிப் பேசவில்லை, தரங்கிணி! பேசவில்லை. நீ ஏதோ சொல்ல வேண்டும் என்ருயே, அதைமட்டும் சொல்லிவிடு! உடனே போய்விடுகிறேன்' என்ருன். - -

தாங்கிணி, ஜோஸபின் முகத்தைச் சிறிதுநேரம் பார்த்துக்கொண்டு மெளனமாயிருந்தாள். ஜோஸ்போ தரங்கிணியின் முகத்தை நிமிர்ந்து பார்க்கத் துணிவில் லாமல், தலையைக் கவிழ்ந்து கொண்டிருந்தான்.

பொழுது போய்க் கொண்டிருந்தது. அடுத்த சில நிமிடங்களில், அவ்விடத்தில் இருள் சூழ்ந்துவிடும். கடற் காற்று வாங்க வந்திருந்த ஆடவரும் பெண்டிரும், தத்தம் வீடுநோக்கி விரைந்து நடக்கும் அரவங்கேட்டது. காக்கை, பருந்து முதலிய பறவைகள் சத்தமிட்டுக் கொண்டே கூடுகளே நோக்கிப் பறந்துசென்றன. பொழுது சாய்ந்து விட்டதை யுணர்ந்து திடுக்கிட்ட தரங்கிணி மெல்லப் பேசலானள். ஜோஸப்! நான் உன்னை இங்கு வந்து சந்திக்கச் சொன்னதற்குக் காரணம் வேறு. அதை யறியாமல், நீயாக்வே ஏதேதோ கற்பனை செய்துகொண்டு இதுவரை என்னென்னவோ பேசிய்ை...... உன்னைக் கண்டிப்பதற்காக நான். இங்கே வரச் சொல்லவில்லை...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/106&oldid=1338522" இலிருந்து மீள்விக்கப்பட்டது