பக்கம்:தரங்கிணி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

106

'அதற்காக இல்லையென்ருல்......?" "வேறு ஒரு முக்கிய விஷயம்பற்றி உன்னிடம் பேசி, ஒரு முடிவுக்கு வருவதற்காக...”

"ஒரு முக்கிய விஷயம்பற்றி என்னிடம் பேசவா?......" "ஆமாம்.' ஜோஸப் திகைப்புற்றவய்ைத் தரங்கிணியின் முகத் தைக் கூர்ந்து நோக்கலானன்.

தரங்கிணியும் அவனை எதிரிட்டு நோக்கி, அவன் முகத்தை ஆராய்ந்தவாறு, "நான் உன்னிடம் ஒன்று கேட்கப் போகிறேன்; ஒளிவு மறைவில்லாமல் உண்மை யாகப் பதில் சொல்லவேண்டும்.'

என்ன கேட்கப் போகிருய்? கேள்: மனத்தில் கள்ளங் கரவின்றிப் பதில் சொல்லுவேன்...

தரங்கிணி கேட்கப்போகும் கேள்வியின் நினைப்பே அவளுடைய முகத்தைச் சிவப்பாக்கிவிட்டது. உடம்பைக் குன்ற வைத்துவிட்டது. அவள் தலை குனிந்துகொண்டு கேட்டாள்: r

'நீ என்னை முதன்முதலாக்க் கண்டதிலிருந்தே அன்பு கொண்டுவிட்டதாகச் சொல்லுகிருயே? இது உண்மை தான? உண்மையாகவே நீ என்ன நேசிக்கிருயா?..."

இக் கேள்வி ஜோஸ்பைத் தப்பர்த்தங் கொள்ளக் செய்துவிட்டது. . -

"இதென்ன, கேள்வி: - தரங்கிணி சிறிது நிமிர்ந்து, அவன் முகத்தை நோக் கியவாறு, "இல்லை, கேட்கிறேன், உன் உள்ளக் கருத்தை உண்மையாக அறிந்து கொள்ளத்தான்..." . .

"என் நெஞ்சைப் பிளந்து காட்டட்டுமா?" "நீ என்மீது கொண்டுள்ள அன்பு பின்னல் மாழுதே:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/107&oldid=1338523" இலிருந்து மீள்விக்கப்பட்டது