பக்கம்:தரங்கிணி.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

107

"என் உடலிலிருந்து உயிர்பிரிந்தாலும் உன்மீது நான் கொண்டுள்ள அன்பு மாருது.

"இதை நான் உறுதியாக நம்பலாமா? “ நான் வேறு எப்படி உன்னை நம்பச் செய்வது? தரங்கிணி! என்னைப் பெற்றெடுத்த அன்னைமீது ஆணை யாக-என் அன்பைக் கவர்ந்த உன்மீது சத்தியமாகச் சொல்லுகிறேன். நிச்சயமாக நம்பு!”

ஜோஸ்ப், தரங்கிணி சிரத்தின்மீது கையை வைத்து விட்டுப் பின் அவள் கரத்தை மலர்த்தித் தன் கையால் அடித்துச் சத்தியப் பிரமாணஞ் செய்து கொடுத்தான்.

தரங்கிணியின் மதிவதனத்தில் திருப்தி காணப்பட்டது. "இது போதும் என்ற வார்த்தையால், தன் திருப்தியை வெளிப்படுத்திய தரங்கிணி, அது சரி; ஜோஸப்! என்மீது கொண்டுள்ள உன் அன்பை நீ எப்படி வெளிப்படுத்துவாய்? என்று கேட்டாள். - ஒரு கணந் தயங்கிய ஜோஸப், எப்படி வெளிப் படுத்தவேண்டும் என்று நீ விரும்புகிருய்? சொல். அப்படியே செய்கிறேன்' என்ருன்.

தரங்கிணி தன்னுள் எழுந்த பரிபவ உணர்ச்சியை உதறிவிட்டு, நீ என்னைக் கலியாணஞ் செய்துகொள் வாயா...?' என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

ஜோஸப் திடுக்கிட்டுப் போனன். அவன் இதுபோன்ற கேள்வியைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்பது, அவ னிடம் காணப்பட்ட விதிர்விதிர்ப்பிலிருந்து தெரிந்தது.

'கலியாணமா? உன்னையா? அது எப்படிச் சாத்திய மாகும்?...' -

தரங்கிணி சாவதானமாகக் கேட்டாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/108&oldid=1338524" இலிருந்து மீள்விக்கப்பட்டது