பக்கம்:தரங்கிணி.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

108

'இதுதான் நீ என்மீது கொண்டிருக்கும் அன்புக்கு அடையாளமா? கலியாணம் என்றதுமே, ஏன் அப்படிப் பின் வாங்குகிருய்? கலியாணத்தால் அல்லாமல், பின் எதல்ை நமக்குள் அன்புத்தொடர்பு இருக்க முடியும்?"

இக்கேள்விகளுக்கு ஜோஸ்பில்ை உடனடியாகப் பதில் சொல்ல முடியவில்லை. -

தரங்கிணி ஜோஸ்பின் முக்த்தைக் கூர்ந்து கவனித்த படியே, கலியாணஞ் செய்துகொள்ளாமலே, விருப்பம் இருக்கும்வரை, இப்படியே உல்லாசமாக இருந்து காலங் கழித்துவிடலாம் என்ற எண்ணமா...??

இப்போதும் ஜோஸப் பேசாமல்தான் இருந்தான். தரங்கிணி துயரந்தோய்ந்த குரலில் நி தானமாகப் பேசிள்ை: 'உன் தயக்கத்தைக் கண்டு நான் ஆச்சரியப் படவில்லை. இவ்விதநிலையையும் நான் எதிர்பார்த்துத்தான் இருந்தேன். பொதுவாக, ஆண்களின் சமாசாரம் உலகப் பிரசித்தமானதுதானே!"

"ஆடவர்களின் பொதுவியல்பு அப்படியிருக்கலாம். ஆனல் என்ன அந்த ரகத்தில் சேர்க்காதே. தரங்கிணி நீ அவசரப்பட்டு என்னைத் தவருக எடைபோடுகிருய்." என்று ஆத்திரத்துடன் குறுக்கிட்ட ஜோஸ்ப், "நான் எந்த அடிப்படையில் அந்தக் கேள்வியை கேட்டேன் என்பதை நீ புரிந்துகொள்ளவில்லை. நான் உன்னை எப்படிக் கலியாணஞ் செய்துகொள்ள முடியும் என்றுதான் கேட் டேனேயொழிய, நான் உன்னே விவாகஞ் செய்துகொள்ள முடியாது என்று சொல்லவில்லையே?’

தரங்கிணி, அவனை நிமிர்ந்து நோக்கியவாறு, இல்லை" அப்படியிருக்க, நீ அவசரப்பட்டு என்மீது குற்றஞ் சாட்டலாமா? - * > . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/109&oldid=1338525" இலிருந்து மீள்விக்கப்பட்டது