பக்கம்:தரங்கிணி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

id

கார்களும் சைக்கிள்களும் பிற வண்டிகளும் அடிக்கடி போகும் பெரிய வீதியில் தாங்கள் நடந்து போகிருேம் என்பதையும் மறந்து, உற்சாக்மாகப் பேசிக் சிரித்துக் கொண்டு போகும் அப் பெண்களின் கரங்களில் புத்தக அடுக்குகளும் பைகளும் காணப்பட்டன. அவர்கள் தத்தம் குடும்ப நிலைக்கும் செல்வநிலைக்குந் தகுந்தவாறு அணி மணிகளைப் பூண்டிருந்தனர். சிலருடைய உடம்புகளில் பட்டாடைகள் பளபளத்துக் கொண்டிருந்தன. சிலருடைய தேகங்களில் பருத்தி ஆடைகள் அழகு செய்து கொண்டி, ருந்தன. அவர்கள் உடுத்திருந்த பாவாடைகள், சோளி, தாவணிகள் பல நிறங்கள் வாய்ந்தனவாயிருந்தன. சில பெண்கள் உயரமாயிருந்தனர்; சிலர், குள்ளமாயிருந்தனர். சிலர் வயதுக்கேற்ற உயரமும் சரீரவாகும் உடையவர்களா யிருந்தனர். சிலர் அழகாகவும், சிவப்பாகவும் காணப் பட்டனர். சிலர் கருப்பாயிருந்தாலும் கவர்ச்சியான தோற்றமுடையவர்களா யிருந்தனர். சிலர் மாநிறமா யிருந்தனர்; ஆனல் முகம் களேயாயிருந்தது. சிலர் அழகற்றவர்களாகவும் இருந்தனர். இவ்வளவு வேற்றுமை கள் இருந்தாலும், இவர்க்ளிடையே காணப்பட்ட கல கலப்பு, இவர்களுடைய வயது, அறிவுவளர்ச்சி, புத்திக் கூர்மை, ஒத்த உணர்ச்சிபோன்ற விஷயங்களில் அதிக வித்தியாசமில்லை என்பதைத் தெரியப்படுத்தின.

இப் பெண்கள் நடந்து வந்துகொண்டிருந்த பாதை களில் இருமருங்கிலும் காணப்பட்ட பள்ளிக் கட்டிடங் களும், பங்களாக்களும், வீடுகளும் சிறியனவாகவும் பெரிய, னவாகவும், பழங்காலத்தனவாகவும் புதிய அமைப்புக் கொண்டனவாகவும் இருந்தன. செந்தோம் சர்ச்சை அடுத் துள்ள கான்வென்டுகளின் கட்டிடங்களே விட்டுவிட்டுப் பார்த்தால், மைசூர் மகாராஜா பங்களாவும், வானெலி

வெளியீடு அலுவலகங்களில் ஒன்முக இருக்கும், காலஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/11&oldid=1338427" இலிருந்து மீள்விக்கப்பட்டது